Morning Wrap | 14.07.2021 - அமைச்சரவை கூட்டம்.. மழை எச்சரிக்கை.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..
டோக்கியோ செல்லும் வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென வேண்டுகோள்.
மத்திய அமைச்சர்கள் நேரில் பங்கேற்கும் அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது. நாடாளுமன்ற தாக்கல் மசோதா குறித்து ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல்
தமிழ்நாட்டுக்கு 1 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
புதுச்சேரியில் பிளஸ் 1 தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டுள்ள நிலையில் மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.
கேரள பெண் பழனியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், தங்கும் விடுதி உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக தகவல் - தீவிரமடையும் விசாரணை
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று டெல்லி பயணம். கூடுதல் தடுப்பூசி குறித்து கோரிக்கை விடுக்கத் திட்டம்
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஏகா ராஜன் குழுவின் அறிக்கை. முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் இன்று தாக்கல் எனத் தகவல்
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு மேலும் 1 லட்சம் டோஸ் கோவாக்ஸின் வருகை. சுகாதாரத்துறையிடம் ஒப்படைப்பு
தமிழ்நாட்டில் துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள 30 பேர் பணியிடைமாற்றம்
தமிழ்நாட்டில் மேலும் 2505 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது
இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரடியாக பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவாக இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரிக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த விஜய் - விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்
கேரளாவில் மேலும் 4 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி - சனி, ஞாயிற்று கிழமைகளில் தளர்வற்ற ஊரங்கு அறிவிப்பு
கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை -உத்தரகாண்டில் புகழ்பெற்ற கன்வர் யாத்திரை ரத்து
மத்திய ஜல்சக்தி அமைச்சருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு; மேகாதது அணையை கட்டியே தீருவோம் என பேட்டி
மேற்கு வங்க மாநிலம் ஹாஸ்மிராவில் 18 ரபேல் விமானங்களை நிறுத்த இந்தியா திட்டம். சீனா மற்றும் கிழக்கு எல்லையை கண்காணிக்க ஏற்பாடு
ஈராக் கொரோனா மருத்துவமனை தீப்பிடித்த சம்பவம் - பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு - விபத்துக்கு காரணமாக 13 பேர் கைது
டோக்கியோ ஒலிம்பிக் இருந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் விலகல்
அடுத்த நான்கு நாட்களுக்கு நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்