மேலும் அறிய

HDFC Bank Merger: ரூ.4.14 லட்சம் கோடி.. எச்.டி.எஃப்.சி. வங்கி செய்த பிரமாண்ட சம்பவம்.. பயனாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

எச்.டி.எஃப்.சி வங்கியுடன் அதன் தாய் நிதி நிறுவனம் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, உலகின் மதிப்புமிக்க வங்கிகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

எச்.டி.எஃப்.சி வங்கியுடன் அதன் தாய் நிதி நிறுவனம் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, உலகின் மதிப்புமிக்க வங்கிகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

எச்.டி.எஃப்.சி வங்கி இணைப்பு:

இந்திய வரலாற்றில் இரு நிறுவனங்களின் இணைப்பால் நடைபெற்ற மிகப்பெரிய பணப்பரிவர்த்தனை எனும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது  எச்.டி.எஃப்.சி வங்கி. எச்டிஎஃப்சி எனும் பெயரை தற்போது பலரும் வங்கி எனும் அடையாளத்தால் அறிந்தாலும், அதன் தாய் நிறுவனம் என்பது ஹவுசிங் பைனான்ஸ் தான். வழக்கமாக தாய் நிறுவனங்களுடன் தான் அதன் கிளை நிறுவனங்கள் இணைக்கப்படும். ஆனால், எச்.டி.எஃப்.சி குழுமம் தனது தாய் நிறுவனமான நிதி நிறுவனத்தை, தனது வங்கியுடன் இணைத்துள்ளது. இதன் மூலம், நாட்டின் முதல் வீட்டு நிதி நிறுவனம் இனி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

பரந்து விரிந்த கிளைகள்:

இந்த இணைப்பின் மூலம் உலகின் அதிக மதிப்புமிக்க வங்கிகளில் முதல்முறையாக இந்திய நிறுவனம் ஒன்று இடம்பிடித்துள்ளது.  இது அமெரிக்க மற்றும் சீனவை சேர்ந்த கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய சவாலாக இருக்கும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.  புதிய HDFC வங்கி நிறுவனம் சுமார் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் - இது ஜெர்மனியின் மக்கள்தொகையை விட அதிகம் ஆகும். அதோடு இந்த வங்கியின் கிளைகளின் எண்ணிக்கை 8,300 க்கும் மேல் அதிகரிக்கும். மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.77 லட்சத்தை கடக்கும்.

172 பில்லியன் டாலர்கள் மதிப்பு:

எச்டிஎஃப்சி பேங்க் லிமிடெட் மற்றும் ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் இணைப்பின் மூலம், உலகின் மதிப்புமிக்க வங்கிகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி,  ஜேபி மோர்கன் சேஸ் & கோ., இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சைனா லிமிடெட் மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்குப் பின்னால், பங்குச் சந்தை மூலதனத்தில் நான்காவது இடத்தில் இருக்கும் கடன் வழங்கும் நிறுவனமாக எச்.டி.எஃப்.சி உருவாகியுள்ளது. ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின் படி,  அந்த வங்கியின் மொத்த மதிப்பு சுமார் 172 பில்லியன் டாலர்கள் ஆகும்.

நிகர லாபம்:

கடந்த மார்ச் மாத இறுதி வரையில் தற்போது இணைக்கப்பட்ட இரு நிறுவனங்களின் வர்த்தகம் ரூ.41 லட்சம் கோடி ஆகும். இணைப்பின் மூலம், நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ. 4.14 லட்சம் கோடியாக இருக்கும். மார்ச் 2023 இன் இறுதியில் இரு நிறுவனங்களின் கூட்டு லாபம் சுமார் ரூ. 60,000 கோடி ஆகும்.

பயனாளர்களுக்கான நற்செய்தி:

எச்.டி.எஃப்.சியின் வங்கி மற்றும் நிதி நிறுவனம் ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டதை தொடர்ந்து,  வங்கியிலிருந்து காப்பீடு மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் பரஸ்பர நிதிகள் வரை முழுமையான நிதிச் சேவைகளை வழங்க உள்ளது. இனி வீட்டுக் கடன்களும் எச்.டி.எஃப்.சி வங்கி மூலமே வழங்கப்பட உள்ளது. இதனால், பயனாளர்கள் தங்களுக்கான நிதிச்சேவைகளை முழுமையாக ஒரே இடத்தில் பெறமுடியும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget