எல்லாமே மாறிப் போச்சு!! கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்! தேர்தல் ஆணையத்தின் அந்த அறிவிப்பு!
எம்எல்ஏக்கள் விதிகள் மீறியதாக இரண்டு தரப்பும் குற்றம் சாட்டிய நிலையில், எட்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மாநிலங்களவையில் காலியாகவுள்ள 16 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 41 வேட்பாளர்கள் போட்டியின்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜூலை மாதம், குடியரசு தலைவர் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநிலங்களவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஹரியானாவில் பல் திருப்பங்களுக்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான் வெற்றிபெற்றதாக அக்கட்சி ட்விட்டரில் அறிவித்தது. ஆனால், மறு வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து, அந்த பதிவை காங்கிரஸ் நீக்கியது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எம்ஏ பி.பி. பாத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், "முன்னதாக, மக்கானுக்கு 30 வாக்குகள் கிடைத்திருப்பதாக தவறாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா மக்கானுக்கு பதில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது இடத்தில் பாஜகவின் கிருஷ்ண லால் பன்வார் வெற்றிபெற்றார். பன்வாருக்கு 31 வாக்குகள் கிடைத்தன. சர்மாவுக்கு 28 வாக்குகளும் மக்கானுக்கு 29 வாக்குகளும் கிடைத்தன. இருப்பினும், இறுதியில், சர்மா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்" என்றார்.
மொத்தமுள்ள 90 எம்எல்ஏக்களில், ஒரு சுயேச்சை வேட்பாளர் வாக்களிக்கவில்லை. ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக 88 வாக்குகள் மட்டும்தான் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு 29.34 வாக்குகள் தேவை என கணக்கிடப்பட்டது. பன்வாருக்கு கிடைத்த கூடுதல் வாக்குகள் சர்மாவுக்கு அளிக்கப்பட்டதன் விளைவாக மக்கான் தோற்கடிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹரியானாவில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள், கிரிஷன் லால் பன்வார் மற்றும் கார்த்திகேய சர்மா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வேட்பாளர்களின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி. நமது மகத்தான தேசத்தின் வளர்ச்சியில் அவர்களின் புதிய பொறுப்புகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
எம்எல்ஏக்கள் விதிகள் மீறியதாக இரண்டு தரப்பும் குற்றம் சாட்டிய நிலையில், எட்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு சனிக்கிழமை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்