Hardik Patel Joins BJP: ”எளிய போர்வீரனாக செயல்படுவேன்” : பாஜகவில் இணைந்தார் ஹர்திக் பட்டேல்...
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல் பிரிவின் தலைவர் ஹர்திக் பட்டேல் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அதன் பின்னர் அவர் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் இன்று அவர் குஜராத் மாநிலத்தின் பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இணைந்த பிறகு பேசிய ஹர்திக் பட்டேல், “பிரதமர் மோடி தலைமையில் நான் ஒரு போர் வீரரை போல் பணியாற்றுவேன். மக்களின் நலன், சமூதாய நலன் மற்றும் மாநில நலன் காரணமாக நான் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
LIVE: પ્રદેશ અધ્યક્ષ શ્રી @CRPaatil ની અધ્યક્ષતામાં કોંગ્રેસના નેતા શ્રી હાર્દિકભાઈ પટેલનું ભારતીય જનતા પાર્ટીમાં સ્વાગત | સ્થળ: પ્રદેશ કાર્યાલય 'શ્રી કમલમ્' https://t.co/Iu7o03oxgv
— BJP Gujarat (@BJP4Gujarat) June 2, 2022
கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஹர்திக் பட்டேல் விலகியிருந்தார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “இன்று நான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டேன். காங்கிரஸ் கட்சி சமீப காலமாக நம் நாட்டிற்கும் நம் சமூகத்திற்கும் எதிராக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் நடைபெறும் பல்வேறு விஷயங்களை காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் மற்றும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம் ஆகியவற்றிற்கு எதிராக உள்ளது. பிரதமர் மோடி என்ன செய்தாலும் அதையும் எதிர்க்கும் நிலையில் தான் காங்கிரஸ் உள்ளது ” எனக் குறிப்பிட்டிருந்தார்.
आज मैं हिम्मत करके कांग्रेस पार्टी के पद और पार्टी की प्राथमिक सदस्यता से इस्तीफा देता हूँ। मुझे विश्वास है कि मेरे इस निर्णय का स्वागत मेरा हर साथी और गुजरात की जनता करेगी। मैं मानता हूं कि मेरे इस कदम के बाद मैं भविष्य में गुजरात के लिए सच में सकारात्मक रूप से कार्य कर पाऊँगा। pic.twitter.com/MG32gjrMiY
— Hardik Patel (@HardikPatel_) May 18, 2022
குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவார் என்ற தகவல் வெளியாகி வந்தது. இந்தச் சூழலில் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்