மேலும் அறிய

New Year 2023: பிறந்தது 2023.. ஹாப்பி நியூ இயர்..! புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடிப்பாடி மக்கள் உற்சாகம்..!

2023ம் ஆண்டு பிறந்ததை இந்தியா முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் ஆடிப்பாடி உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

உலக மக்கள் அனைவரும் 2023 புத்தாண்டை முழு உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.  உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேரமுறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். அந்த வகையில்  உலகின் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்தது.  இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2023 புத்தாண்டு பிறந்தது.   அதைதொடர்ந்து, ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்தியாவிற்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை வரவேற்றன

இந்தியாவில் பிறந்தது புத்தாண்டு:

அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் இந்தியாவிலும் 2023 புத்தாண்டு பிறந்தது. அதையடுத்து இந்திய மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். கேக் வெட்டி, இனிப்புகளை பகிர்ந்து. பட்டாசுகளை வெடித்து, வண்ண விளக்குகளை ஒளிரச் செய்து, பாடல்களை பாடியும், சக நண்பர்களை கட்டியணைத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்தனர். விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை கூடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அங்கு ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம் களைகட்டியது.  புத்தாண்டையொட்டி நள்ளிரவிலேயே ஏராளமான பக்தர்கள் அருகிலிருந்த கோயில்களுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.  கடந்த ஆண்டுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும்  என்றும் சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதையொட்டி, HAPPY NEWYEAR 2023 என்ற ஹேஷ்டேக்கும் தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களும், பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த பாதுகாப்பு:

இதனிடையே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் ஆங்காங்கே சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  இரவு 1 மணிக்கு மேல் பொதுமக்கள் அநாவசியமாக வெளியே சுற்ற வேண்டாம் எனவும் எச்சரித்தனர். 8 மணிக்கு மேலாக பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் நுழையாமல், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காலையில் கடற்கரைகள் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் ஏராளமான பொதுமக்கள் குவிய வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவை தொடர்ந்து பல நாடுகளும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வரும் நிலையில், உலக அளவில் கடைசியாக அமெரிக்காவிற்கு அருகில் உள்ள பொதுமக்கள் வசிக்காத தீவுகளான, பேக்கர் ஐ-லேண்ட் மற்றும் ஹவுலேண்ட் ஆகிய தீவுகளில், இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget