சுதந்திர தின விழா 2022: விடுதலைப் போராட்ட வீரர்களின் உத்வேக வார்த்தைகள்.. நீங்கள் நினைவுகூர்வதற்காக..
நாடு 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடத் தயாராகிவரும் நிலையில் நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் முழங்கிய உத்வேகப் பேச்சுக்களை நினைவுகூர்வோம்.
நாடு 76-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடத் தயாராகிவரும் நிலையில் நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் முழங்கிய உத்வேகப் பேச்சுக்களை நினைவுகூர்வோம்.
200 ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த தேசத்தின் விடுதலையைப் பெற எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்தனர். சுதந்திர தினம் என்பது அந்தத் தியாகிகளின் வீரத்தையும், தேசப்பற்றையும் கொண்டாடும் நாள்.
அந்த நாளில் நாம் நம் உறவுகள், நட்புகள், சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள விடுதலை வீரர்களின் முழக்கங்களையே பயன்படுத்தலாமே.
இதோ உங்களுக்காக சில முழக்கங்கள்:
1. புரட்சிகர சிந்தனைக்குத் தேவை கருணையற்ற விமர்சனம், சுதந்திர சிந்தனை மட்டுமே பகத் சிங்
2. கண்ணுக்கு கண் என்ற பழிவாங்கும் புத்தி ஒட்டுமொத்த உலகையும் குருடாக்கிவிடும் மகாத்மா காந்தி.
3. சமூகத்தில் முதலாளித்துவ ஆதிக்க சக்திகளை கண்டறிந்து தடுக்காவிட்டால் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள் ஜவஹர்லால் நேரு
4. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அச்சமூகத்தின் பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தை வைத்தே கணிப்பேன் பி.ஆர்.அம்பேத்கர்
5. அநீதியுடனும் தவறுடனும் செய்து கொள்ளும் சமரசம் தான் மிகப்பெரிய குற்றம். நீதியைப் பெறுவதற்கு அதை நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் சுபாஷ் சந்திர போஸ்
6. எதிரியின் துப்பாக்கியின் முன் நாம் நிற்கும்போது சுதந்திரம் நம்மைத் தேடி வருகிறது என்று அர்த்தம் சந்திரசேகர் ஆசாத்
7. புரட்சிக்கான வேட்கை நம் இதயத்தில் இருக்கும்போது எதிரிக்கு எத்தனை பலம் இருக்கிறது என்று பார்த்துவிடலாம் ராம்பிரசாத் பிஸ்மில்
8. சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை. அதை நான் அடைந்தே தீருவேன் பால கங்காதர திலகர்
9. நம் இலக்கில் உறுதி வேண்டும். பேச்சில் துணிச்சல் வேண்டும். செயலில் அக்கறை வேண்டும் சரோஜினி நாயுடு
10. நம் மனதில் பயமில்லை என்றால்; நம் தலை நிமிர்ந்து நிற்குமானால்; நம் எண்ணங்கள் சுதந்திரமானவையாக இருந்தால்; இவ்வுலகம் வெறும் எல்லைகளால் துண்டாடப்படாமல் இருந்தால், வார்த்தைகள் உண்மையின் வடிவமாக இருந்தால்; நம் கடின உழைப்புகள் முழுமையான வெற்றியைத் தரும். நம் பகுத்தறிவு தூய்மையானதாக இருக்க வேண்டும். ரபீந்திரநாத் தாகூர்
இவர்கள் மட்டும் தான் விடுதலைக்காக முழங்கியவர்கள் என்று கூறிவிட முடியாது. இன்னும் எண்ணற்றோரின் துடிப்பான பேச்சுக்கள் உள்ளன. இந்தப் பேச்சுக்கள் தான் அப்போதைய இளைஞர்களின் விடுதலை வேட்கைக்கு எண்ணெய் ஊற்றி நெருப்பாக வளரச் செய்தன. நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆனாலும் கூட இன்னும் ஊழல், போதை, வறுமை, பொறுப்பின்மை போன்ற நிறைய சமூக இழுக்குகளில் இருந்து விடுதலை பெற வேண்டியுள்ளது.