Guntur: இப்படி ஒரு மூடநம்பிக்கை.! குழந்தை இல்லாததால் பெண் செய்த கொடூர காரியம்.. உயிரிழந்த சோகம்!
குழந்தை இல்லாததால் பெண் ஒருவர் செய்த காரியம் அவருடைய உயிரை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இந்தியாவில் பலரும் பல வகையான அறிவுரைகள் கொடுப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுரைகளுடன் சேர்ந்து பலரும் சில மூட நம்பிக்கைகளையும் தெரிவிப்பார்கள். அப்படி ஒரு மூட நம்பிக்கையை கேட்டு பெண் ஒருவர் செய்த காரியம் அவருடைய உயிரை பறித்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் அமைந்துள்ள துபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கும் 19 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர்களுக்கு குழந்தை பிறக்காமல் இருந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஒரு மூடநம்பிக்கை ஒன்றை கூறியுள்ளனர். அதாவது குழந்தை இல்லாத பெண்கள் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் தொப்பில் கொடியை சாப்பிட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் பெறாமல் என்பதை பகிர்ந்துள்ளனர். இதை கேட்ட அந்தப் பெண் கடந்த வியாழக்கிழமை ஒரு குழந்தை ஒன்றின் தொப்பில் கொடியை வாங்கி உண்டுள்ளார்.
அதன்பின்னர் அப்பெண்ணிற்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அப்பெண் இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த பிரேத பரிசோதனையின் முடிவில் அப்பெண் இந்த தொப்பில் கொடியை சாப்பிட்டதால் மரணம் அடைந்து உறுதியாகியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மகப்பேறு மருத்துவர் ஒருவரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அதற்கு அவர்,”பிறந்த குழந்தையின் தொப்பில் கொடியை சாப்பிட்டால் யாரும் கர்ப்பம் தறிக்க வாய்ப்பு இல்லை. அந்தக் கூற்றில் எந்தவித அறிவியலும் இல்லை” எனக் கூறியுள்ளார். இந்த தவறான மூடநம்பிக்கையை காவல்துறையினர் மக்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற தவறான மூட நம்பிக்கையை யாரும் பின்பற்ற கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:இனி வேஸ்ட் ஆகாது.. 28 நாட்கள் அப்படியே இருக்கும் - அப்டேட் ஆனது கோவாக்சின் மருந்து!