இந்தாங்க ரூ.500..பாஸ் போட்ருங்க! விடைத்தாளோடு பணத்தை ஒட்டி அனுப்பிய 12ம்வகுப்பு மாணவன்!
Gujarat: குஜராத் மாநிலத்தில் மாணவர் ஒருவர் பொதுத் தேர்வில் பாஸாக விடைத்தாளில் ரூபாய் 500ஐ ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.தேர்வு ஆணையம் மாணவனை ஓர் ஆண்டிற்கு தேர்வு எழுத தடை விதித்துள்ளது.
Gujarat: குஜராத் மாநிலத்தில் மாணவர் ஒருவர் பொதுத் தேர்வில் பாஸாக விடைத்தாளில் ரூபாய் 500ஐ ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.தேர்வு ஆணையம் மாணவனை ஓர் ஆண்டிற்கு தேர்வு எழுத தடை விதித்துள்ளது.
நாம் எல்லாம் நமக்கு மூத்தவர்களோ, நமது நண்பர்களோ பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற பல்வேறு நூதன முயற்சிகளை செய்ததை கேள்விப் பட்டிருப்போம் அல்லது நாமே முயற்சி செய்திருப்போம். அவை அதிகபட்சமாக பிட் அடிப்பது, சக மாணாக்கார்களை கேட்டு எழுதுவது, கேள்வித்தாளில் விடைகளை, கண்காணிப்பாளருக்குத் தெரியாமல் பரிமாறிக்கொள்வது என்பதாக இடுக்கும். அவை எல்லாம் நாம் அனுபவப் படவில்லை என்றாலும் சினிமாக் காட்சிகளிலாவது தெரிந்துகொண்டிருப்போம். ஆனால் குஜராத் மாநிலத்தில் ஒரு மாணவர் செய்திருப்பது அனைவரையும் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.
12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் படிக்கும் இந்த மாணவன் கடந்த மார்ச் ஏப்ரல் மதம் நடைபெற்ற பொதுத்தேர்வில், அவர் எழுதிய தேர்வு ஒன்றில் ரூபாய் 500ஐ ஒட்டி உள்ளார். இதனை கண்டுபிடித்த தேர்வு ஆணையம், மாணவனை அடுத்த ஒரு ஆண்டுக்கு தேர்வு எழுத தடை விதித்துள்ளது. மேலும், இதனை கண்டுபிடித்த பிறகு, குஜராத் பள்ளி மேல்நிலை தேர்வு ஆணையம் சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து விசாரித்த பிறகு, அவர்கள் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, அந்த வகுப்பில் மொத்தம் 22 மாணவர்கள் அவருடன் தேர்வு எழுதினர். அதில், இந்த மாணவர் தன்னை வேதியியல் பாடத்தில் தேர்ச்சி பெற வைக்க விடைத்தாளில் ரூபாய் 500ஐ ஒட்டியுள்ளார். இதனால் மாணவர் தேர்வு எழுதுவதற்கான விதிமுறைகளை மீறி முறை கேட்டில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டது. தற்போது மாணவர் அடுத்த ஒரு ஆண்டுக்கு பொதுத் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் குஜராத் மட்டுமில்லாது, நாடு முழுவதுமே அந்த மாணவனுக்கு எப்படி பணம் கொடுத்தால் பாஸ் ஆகலாம் எனும் எண்ணம் வந்தது எனும் கேள்வி பலதரப்பிலும் பேசுபொருளாகியுள்ளது. பலர் கல்வி வியபாரப் பொருளாகிவிட்ட்டதை எதிர்காலத் தலைமுறையினர் சிறு வயதிலேயே அடையாளம் கண்டிருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில், குஜராதைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் ஆங்கிலம் பேச திணறிய விவகாரத்தால், வெளிநாடு செல்ல எழுதப்படும், International English Language Testing System எனும், IELTS தேர்வில் முறைகேடாக பணத்தினை கொடுத்து தேர்ச்சி பெற வைத்துள்ள சம்பவம் அண்மையில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளி மாணவன் செய்திருக்கும் இந்த செயல் மீண்டும் குஜராத்தில் கல்வி குறித்து மக்களிடையே உள்ள அலட்சியமான எண்ணத்தினை பிரதிபலிப்பதாக உள்ளது எனபலரும் தெரிவித்துவருகின்றனர். இந்த சம்பவங்கள் அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்