மேலும் அறிய

Isudan Gadhvi : ஊடகவியலாளர் டூ முதலமைச்சர் வேட்பாளர்: யார் இந்த ஆம் ஆத்மியின் இசுதன் காத்வி!

Gujarat Polls: சட்டப் பேரவை தேர்தலுக்கு ஆம் ஆத்மி சார்பில் முதலமைச்சர் வேட்பாளைரை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு குஜராத் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. 1995- ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் தனக்கென தனி சாம்ராஜியத்தை உருவாக்கி வைத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. தேர்தல் களத்தில் பா.ஜ.க. - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி தொடர்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் தனது வெற்றியை உறுதி செய்த ஆம் ஆத்மி குஜராத்திலும் வெற்றி பெறும் முனைப்பில் தீவிரமாக உள்ளது.  கெஜ்ரிவாலின் ’டெல்லி மாடல்’ குஜராத்திலும் எடுபடுமா? என்ற கேள்விக்கு எழுந்துள்ளது. இருப்பினும், குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. பெற்றுள்ள செல்வாக்கை ஆம் ஆத்மியின் திட்டங்கள் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும், குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் செல்வாக்கு மிகுந்த தலைவர் பெரிதாக யாரும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சட்டப் பேரவை தேர்தலுக்கு ஆம் ஆத்மி சார்பில் முதலமைச்சர் வேட்பாளைரை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி நடத்திய சர்வேயில் 73 சதவீத வாக்குகளை இவர் பெற்றுள்ளார்.

யார் இவர்?

ஊடகவியலாளர் இசுதன் காத்வி குஜராத் அரசியல் களத்தில் ஆம் ஆத்மியின் நம்பிக்கையை பெற்ற அரசியல்வாதி. இன்று முதலமைச்சர் வேட்பாளராக உயர்ந்துள்ளார்.

இசுதன், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் இணைபொதுச் செயலாளராகவும், தேசிய செயற்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். அரசியல் பயணத்தை தொடங்கும் முன் இவர் இதழியல் துறையில் பணி புரிந்துள்ளார். செய்தி தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

செய்தி தொலைக்காலத்தில் குஜராத்தி மொழியில் இரவு நேரத்தில் ஒளிப்பரப்பான பரைம் டைம் விவாத நிகழ்ச்சியான மஹாமந்தன் (Mahamanthan) மிகவும் பிரபலமானது. பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து நிபுணத்துவம் பெற்றவர்களுடன் விவாதம் செய்யும் நிகழ்ச்சி அது. அந்நிகழ்ச்சி வெற்றி பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. VTV News-ன் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்துள்ளார். மேலும், இவர் தொகுத்து வழங்கிய பரைம் டைம் நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இசுதனும் செய்தித் துறையும்:

விவசாய கும்பத்தில் பிறந்த இசுதனின் செய்தி ஊடக பயணம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் மூலம் தொடங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தின் தூர்தர்ஷன் கேந்ரா பிரிவில் ஒளிப்பரபப்பட்ட ’ யோஜனா’ (‘Yojana’) என்ற நிகழ்ச்சியின் மூலம் ஜர்னலிசம் துறைக்குள் நுழைந்தார். பின்னர், போர்பந்தர் பகுதியில் ஈ.டி.வி. குஜராத்தி (ETV Gujarati ) செய்தி தொலைக்காட்சிக்கான செய்தி சேகரிப்பாளராக (on-field journalist) 2007 ஆம் அண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார். 

இவருடைய முயற்சியில் கபரடா தாலுக்காவில் உள்ள தங் பகுதியில் சட்ட விதிகளை மீறை நடைபெற்ற காடுகளை அழிக்கும் சம்பவம் மற்றும் அதோடு தொடர்புடைய ரூ.150 கோடி ஊழல் ஆகிய குற்றங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது குஜராத் அரசு நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு VTV செய்தி தொலைக்காட்சியில் மிக இளம் வயது ஆசிரியராக பொறுப்பேற்றார். மாநிலத்தில் மிக குறைந்த வயது இளைஞர் ஒரு செய்தி ஊடகத்தின் தலைமை பொறுப்பை வகித்தவரானர். தனது ப்ரைம் டைம் நிகழ்ச்சியில் விவசாய துறை சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளார். பல்வேறு முக்கியமான விஷயங்களை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். மகாமந்தன் நிகழ்ச்சிக்கு ஏராளமான பார்வையாளார்கள் இருந்துள்ளனர். 

அரசியல் பயணம்:

கடந்த 2021 ஆம் ஆண்டு, தனது பணியை விட்டுவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்து கொண்டார் இசுதன். அகமதாபாத் நகரில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமையகத்தின் தொடக்க விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

இசுதன் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “ இசுதன் தன் ஊடகவியலாளர் பணியை தியாகம் செய்துவிட்டு, மாற்றத்திற்காக அரசியலில் தன்னை இணைத்து கொண்டது பெரிய விஷயம்.” என்று பாராட்டினார்.

ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் 55 பேருடன் பேரணி, பாலியல் வழக்குகள் உள்ளிட்டவைகள் மற்றும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் குஜராத்தில் பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தில் அத்து மீறி நுழைந்தது உள்ளிட்டவைகளுக்காக இசுதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு தேர்வு வினாத்தாள் முன்னரே வெளியாகிய சர்ச்சையை எதிர்த்து போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி பா.ஜ.க. வின் அலுவலகத்தில் நுழைய முற்பட்டது. இந்த விஷயத்திற்காக இசுதன் மீது வழக்கு தொடரப்பட்டு,  அவருக்கு காந்தி நகர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 

குஜராத் மாநிலத்தில் பிரபல ஊடகவியலாளர் என்பதால் இவர் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுள்ளார். குஜ்ராத் தேர்தலில் இவர் ஜொலிப்பாரா என்பதை பார்ப்போம். 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget