Watch Video: திண்டுக்கல்லில் கோலாட்டம் ஆடிய குஜராத் மாநில அமைச்சரின் வீடியோ வைரல்..
குஜராத் மாநில அமைச்சர் குபேர்பாய் திண்டோர், சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கோலாட்டமாடிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக தமிழ்நாடு வந்தடைந்த குஜராத் மாநில பழங்குடியின மேம்பாட்டு துறை அமைச்சர் குபேர்பாய் திண்டோர் கோலாட்டம் ஆடினார்.
சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி:
குஜராத் மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு நேரில் அழைப்பதற்காக குஜராத் மாநில பழங்குடியின மேம்பாட்டு துறை அமைச்சர் குபேர்பாய் திண்டோர், பழங்குடியின மேம்பாட்டு துறை சசிவாலயா செயலாளர் முரளி கிருஷ்ணா ஆகியோர் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தனர்.
கோலாட்டம்:
அப்போது, திண்டுக்கல் சௌராஷ்ட்ரா சபா சார்பாக பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர். அப்போது குஜராத் மாநில பழங்குடியின மேம்பாட்டுத்துறை அமைச்சர் குபேர்பாய் திண்டோர் பெண்களுடன் இணைந்து கோலாட்டம் ஆடி உற்சாகமடைந்தார். இந்நிலையில் அமைச்சர் கோலாட்டம் ஆடியதை பார்த்து மக்களும் உற்சாகம் அடைந்தனர்.
திண்டுக்கல்: சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் குஜராத் மாநில அமைச்சர் திரு. குபேர்பாய் திண்டோர் கோலாட்டம் ஆடி உற்சாகம் pic.twitter.com/kcbEkpfZwL
— AIR News Chennai (@airnews_Chennai) March 25, 2023
இந்நிலையில் குபேர்பாய் திண்டோர் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் இருந்த மக்கள் புலம் பெயர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குடி பெயர்ந்தனர் . அவர்களை ஒன்றிணைக்கும் விதமாக குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. குஜராத்தில் நடைபெற உள்ள சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தங்களை அழைப்பதற்காக தாங்கள் நேரில் வந்துள்ளதாக குஜராத் மாநில பழங்குடியின மேம்பாட்டு துறை அமைச்சர் குபேர்பாய் திண்டோர் தெரிவித்தார்.
Also Read:,Amit Shah : இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கொந்தளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!