மேலும் அறிய

Govt Hikes Paddy MSP: விவசாயிகள் மகிழ்ச்சி..! நெல், பருத்தி உள்ளிட்ட 14 பயிர்களுக்கான கொள்முதல் விலை உயர்வு - மத்திய அரசு அதிரடி

Govt Hikes Paddy MSP: நெல், பருத்தி உள்ளிட்ட 14 பயிர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

Govt Hikes Paddy MSP: நெல், பருத்தி உள்ளிட்ட 14 விவசாய பயிர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் நிதிச் செலவில், குறைந்தபட்ச ஆதார விலை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நெல்லுக்கான கொள்முதல் விலை உயர்வு:

இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் அடுத்தடுத்து 4 மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) குவிண்டாலுக்கு 5.35 சதவிகிதம் உயர்த்தி, ரூ.2,300 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 'பொது' ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,300 ஆகவும், 'ஏ' கிரேடு ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,320 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கான அரசாங்கத்தின் ஆதரவின் முக்கிய நடவடிக்கையாக இந்த முடிவு பார்க்கபடுகிறது.  தேர்தல்களுக்கு முன்னதாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு:

குறைந்தபட்ச ஆதார விலை உயர்வின் மொத்த நிதி தாக்கம் ரூ.2,00,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய பருவத்தை விட சுமார் ரூ.35,000 கோடி அதிகமாகும்.  இதுதொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், “கணிசமான உபரி அரிசியை நிர்வகித்த போதிலும், நெல் ஆதரவு விலையில் குவிண்டால் ஒன்றுக்கு 117 ரூபாய் உயர்த்த அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு ஆதரவு விலையை பராமரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் "தெளிவான கொள்கையின்" நிரூபணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

14 பயிர்களுக்கான கொள்முதல் விலை உயர்வு:

தானிய வகைகளில், 'ஹைபிரிட்' ரக ஜவ்வரிசிக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 191 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,371 ரூபாயாகவும், மல்தானி ரகம் குவிண்டாலுக்கு 196 ரூபாய் அதிகரித்து 3,421 ரூபாயாகவும் உள்ளது. 2024-25 சீசனில் கம்பிற்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.125 அதிகரித்து ரூ.2,625 ஆகவும், ராகிக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.444  உயர்த்தப்பட்டு ரூ.4,290 ஆகவும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.135 உயர்த்தப்பட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,225 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளை சார்ந்திருப்பதை குறைக்க, துவரம் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.550 உயர்த்தப்பட்டு ரூ.7,550 ஆகவும், உளுத்தம் பருப்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.450 உயர்த்தப்பட்டு ரூ.7,400 ஆகவும், மூங்கில் கொள்முதல் விலை ரூ.124 உயர்த்தப்பட்டு ரூ.8,682 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சூரியகாந்தி விதைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.520 உயர்த்தப்பட்டு குவிண்டாலுக்கு ரூ.7,280 ஆகவும், நிலக்கடலைக்கான கொள்முதல் விலை ரூ.406 உயர்த்தப்பட்டு ரூ.6,783 ஆகவும், சோயாபீன் (மஞ்சள்) குவிண்டாலுக்கு ரூ.292 உயர்த்தப்பட்டு ரூ.4,892 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எள்ளுக்கான MSP குவிண்டாலுக்கு ரூ.632 உயர்த்தப்பட்டு ரூ.9,267 ஆகவும், நைஜர் விதைகள் குவிண்டாலுக்கு ரூ.983 உயர்த்தப்பட்டு ரூ.8,717 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருத்திக்கான MSP, 'நடுத்தர ஸ்டேபிள்' ரகத்திற்கு, குவிண்டால் ஒன்றுக்கு, 501 ரூபாய் உயர்த்தப்பட்டு 7,121 ரூபாயாகவும், 'லாங் ஸ்டேபிள்' ரகத்திற்கு 7,521 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget