Viral Video: சிவன் கோயிலில் சாமி கும்பிட்ட ஆடு... மனிதர்களைப் போல மண்டியிட்ட அதிசயம்! வீடியோ
இந்த ஆடு இக்கோயிலுக்கு அடிக்கடி வந்து மனிதர்களைப் பின்பற்றி இவ்வாறு மண்டியிட்டு வணங்குவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆனந்தேஸ்வரர் கோயிலில் மனிதர்களுடன் சேர்ந்து ஆடு ஒன்று கடவுளிடம் பிரார்த்தனை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம், கான்பூர் மாவட்டம், பரமத் எனும் பகுதியில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் இந்த ஆடு முன்னதாக மனிதர்களைப் போலவே மண்டியிட்டு பிரார்த்தனை செய்தபடி நின்று அங்கிருந்தோரைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் முன்னதாக ஆட்டின் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது.
कानपुर में एक बकरा आजकल चर्चा का विषय बना हुआ है। दावा किया गया कि परमट स्थित आनंदेश्वर मंदिर में यह बकरा अक्सर बाबा के मुख्य द्वार के सामने दंडवत प्रणाम करता दिखाई देता है। ये वीडियो तेजी से वायरल हो रहा है। #Kanpur #Goat #UttarPradesh pic.twitter.com/BYVLAI9FvV
— sudhir kumar pandey (@IamsudhirPandey) October 9, 2022
மேலும், இந்த ஆடு இக்கோயிலுக்கு அடிக்கடி வந்து மனிதர்களைப் பின்பற்றி இவ்வாறு மண்டியிட்டு வணங்குவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இதே போல் வலுவான புலி ஒன்றுடன் நாய் ஒன்று மல்லு கட்டி மோதும் இந்த வீடியோ, அனிமல்ஸ் பவர் எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு அதிக லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.
கோல்டன் ரெட்ரீவர் எனும் இனத்தைச் சேர்ந்த இந்த நாய் புலியுடன் சண்டைக்குப் போவதோடு, அதன் காதையும் கடிக்க முயற்சிக்கிறது.
வெளிநாட்டில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு விலங்குகளுக்கும் அருகில் சிங்கம் ஒன்றும் இந்த சண்டைக்குள் தலையிட விரும்பாத வண்ணம் அமைதி காத்து நின்று கொண்டிருப்பதும் காண்போரை வியப்புக்குள்ளாக்குகிறது.
View this post on Instagram
இந்நிலையில், ”எங்க தலக்கு தில்ல பாத்தீங்களா” என்ற தொனியில் நெட்டிசன்கள் வீடியோவின் கமெண்ட் செக்ஷனில் கருத்து தெரிவித்து களமாடி வருகின்றனர்.