Goa : கோவா டூர் ப்ளான் இன்னுமா போட்டுக்கிட்டே இருக்கீங்க.. இனி இதுக்கெல்லாம் தடை..
கோவா என்றாலே பீச் ரிசார்டும், இரவு பார்ட்டிகளும் தான் நினைவுக்கு வரும். கோவா என்பது பலருக்கும் ஒரு உணர்வு. இந்த நகரம் உண்டாக்கியிருக்கும் திறப்புகள் அப்படியான ஈர்ப்பு விசையை அனைவருக்கும் தருகிறது.
கோவா என்றாலே பீச் ரிசார்டும், இரவு பார்ட்டிகளும் தான் நினைவுக்கு வரும். கோவா என்பது பலருக்கும் ஒரு உணர்வு. இந்த நகரம் உண்டாக்கியிருக்கும் திறப்புகள் அப்படியான ஈர்ப்பு விசையை அனைவருக்கும் தருகிறது. ஆனால், பிரபலமான கடற்கரைகள், கட்டிடங்கள், குளம்பி, உணவகங்கள், மதுகூடங்கள் தாண்டி சற்று வித்தியாசமான அனுபவங்களையும் கோவா தருகிறது.
இந்நிலையில் சுற்றுலா தலமான கோவாவில் இனி பொது இடத்தில் மது அருந்துதல், சமைத்தல், பிச்சை எடுத்தல், கடற்கரையில் வாகனங்களை செலுத்துதல் ஆகியனவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறுவோருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவா சுற்றுலா அமைச்சர் நிகில் தேசாய், கோவாவில் இனி பொது இடத்தில் மது அருந்துதல், சமைத்தல், பிச்சை எடுத்தல், கடற்கரையில் வாகனங்களை செலுத்துதல் ஆகியனவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநிலத்திற்கு வெளியே மல்வான் (தெற்கு மகாராஷ்டிரா), கார்வார் (கர்நாடகா) ஆகிய பகுதிகளில் நீர் விளையாட்டு நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. மது பாட்டில்களை பொது வெளியில் உடைத்து எறிதலும் தடை செய்யப்பட்டுள்ளது. க்ரூயிஸ் படகுகளுக்கு சட்டவிரோதமாக டிக்கெட்டுகள் விற்பதும் தடை செய்யப்படுகிறது என்று கூறினார். இவ்வாறாக சட்டவிரோதமாக படகு போக்குவரத்து நடத்தும் நிறுவனங்களுக்கு ரூ5000 முதல் ரூ50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இபிகோ 188ன் படி அபராதம் விதிக்கப்படும். கோவா சுற்றுலா தலத்தின் மாண்பை மீட்டெடுக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கோவா சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள்:
பொதுவாக கோவாவின் கடலோரப் பகுதிகளில் சுற்றுலா கவனம் பெற்றுள்ளது. உள்நாட்டில் சுற்றுலாவானது குறைந்த அளவிலான செயல்பாட்டையே கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில், 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது, அவர்களில் சுமார் 1.2 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, கோவாவானது இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாக பிரித்தானியர்கள் மற்றும் உருசியர்கள், விருந்துக்கு குறைந்த வசதிகளுடன், தேர்ந்தெடுக்க விரும்பும் இடமாக இருந்துவருகிறது. மேலும் உயர் அடுக்கு மக்கள்தொகையை ஈர்க்கும் வகையில் மாற்றங்கள் செய்யலாம் என அரசு விரும்புகிறது. அதன்படியே தற்போது பல்வேறு மாற்றங்களும் அமலுக்குக் கொண்டு வரப்படுகின்றன.
நீங்கள் கோவாவிற்கு சென்றால் என்னவெல்லாம் தடை இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டீர்கள் தானே. இனி கோவா சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் என்னவென்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். வடக்கு கோவாவில் அரேபியக் கடல் முட்டும் இடத்தில் இந்த கோட்டை அமைந்திருக்கிறது. சூரிய உதயம், மறைவைப் பார்க்க இதை விட அழகான இடம் கிடைப்பது கடினம். மேலும் கோட்டையிலிருந்து கீழிறங்கும் பாதைகள் சுற்றிலும் இருக்கும் அழகை கண்டு ரசிக்க வகை செய்கின்றன. சிங்க்வரிம் கடற்கரையை இரண்டாய்ப் பிரிக்கும் இந்த கோட்டை நகரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து பார்க்கக் கிடைக்கும் கடலின் முகங்கள் அரிது. கோவாவின் அழகிய அமைப்பைப் பார்க்க விரும்பினால் இந்த கோட்டைக்கு செல்ல வேண்டும். ஏனெனில், இது அமைந்திருக்கும் இடம் அப்படி. அளவில் சிறிய கோட்டையாய் இது இருந்தாலும் இது தரும் பார்வை அதற்கு ஈடு செய்கிறது. குவரிம் கரையிலிருந்து படகில் சென்றுதான் இந்த கோட்டையை அணுக முடியும். திரகோல் நதியை ஒட்டி இதன் மதில் தொடங்கும்.
இது தற்போது ஒரு உணவகமாக மாற்றப்பட்டிருக்கிறது. கோவாவின் பிரபலமான இந்த கோட்டையின் பெருமை இதன் கலங்கரை விளக்கம். இப்போது பயன்பாட்டில் இல்லாத இந்த கலங்கரை விளக்கத்தின் உயரம் நான்கு மாடிகள். கோவாவில் போர்த்துக்கீசிய கட்டமைப்பில் இல்லாமல் மராத்திய கட்டடக் கலையமைப்பில் இருக்கும் ஒரே கோட்டை இது. தோட்டங்கள், அருகிலேயே பட்டாம்பூச்சி காட்சியகம் இருக்கும் இடம் இது. இப்போது இங்கு சிதிலங்கள் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. ஆதலால், வரலாற்று ஆர்வலர்கள் தவிர்க்க முடியாத இடம் ஆகியிருக்கிறது. சிறிது காலத்திற்கு இது சிறைச்சாலையாக இருந்திருக்கிறது. இப்போது அமைதியான இடத்தில், அற்புதமான காட்சியுடன் கடலின் கரையில் அமர்ந்திருக்கிறது. இவையெல்லாம் நீங்கள் நிச்சயமாக தவறவிடாமல் பார்க்க வேண்டிய இடங்களாகும்.