Watch Video: "ஹிந்தி பேசுங்க" - கட்டாயப்படுத்திய வடமாநில கும்பல்... கன்னடம் பேச சொல்லி கெத்துக்காட்டிய சிங்க பெண்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியர்கள் அனைவரும் ஆங்கிலத்தை புறக்கணித்து ஹிந்தி மொழியை பயில வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
கோவாவில் படகு சவாரியில் ஈடுப்பட்ட ஒரு குழுவிடம் வடமாநில தொழிலாளர்கள் சிலர் ஹிந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே ஹிந்தி மொழி திணிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அமைச்சர் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை ஹிந்தி மொழிதான் இந்தியாவில் தேசிய மொழி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியர்கள் அனைவரும் ஆங்கிலத்தை புறக்கணித்து ஹிந்தி மொழியை பயில வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் அஜய் தேவ்கன் இந்தி தேசிய மொழி என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு தென்னிந்திய நடிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் கண்டனங்களை பதிவிட்டனர். கன்னட நடிகர் சுதீப் இந்தி ஒன்றும் தேசிய மொழி கிடையாது என்று கண்டனத்தை பதிவு செய்தார்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் புதிய சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், சமஸ்கிருதம்தான் கன்னடம், இந்தி, தமிழ் மொழிகளைவிட பழமையானது என்று கூறியுள்ளார். சமஸ்கிருதத்தில் இருந்து கூட பல மொழிகள் உருவாகியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த காரணத்தால் சமஸ்கிருதம் ஏன் நாட்டின் தேசிய மொழியாக இருக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படியாக, ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஹிந்திக்கு எதிராக மொழிப்போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கோவாவில் படகு சவாரியில் ஈடுப்பட்ட ஒரு குழுவிடம் வடமாநில தொழிலாளர்கள் சிலர் ஹிந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு அங்கிருந்த பெண் ஒருவர் முடிந்தால் நீங்கள் கன்னடம் பேசுங்கள் பார்ப்போம் என்று குரலெழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ಹೀಗಿದೆ ಹಿಂದಿ ದಬ್ಬಾಳಿಕೆ
— ರೂಪೇಶ್ ರಾಜಣ್ಣ(RUPESH RAJANNA) (@rajanna_rupesh) April 24, 2022
ಏನೇ ಆಗಲಿ ಈ ದುರಹಂಕಾರಿ ಹಿಂದಿವಾಲನಿಗೆ ಸರಿಯಾದ ಉತ್ತರ ಕೊಟ್ಟ ಕನ್ನಡತಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು.
ಇವನ ಪ್ರಕಾರ ಹಿಂದಿ ಕಲಿತರೆ ಮಾತ್ರ ಭಾರತೀಯ ಅನ್ನೋ ಅರ್ಥದಲ್ಲಿ ವಂದೇ ಮಾತರಂ,ಹಿಂದಿ ಬೋಲೋ ಅಂತಾವನೆ ಈ ನಾಲಯಕ್.
ಲೇ ಮಂಗ ನಾವು ಸಾವಿರಾರು ವರ್ಷಗಳ ಕನ್ನಡ ಮಾತಾಡೋ ಕನ್ನಡಿಗರು ಕಣೋ
ನೆನ್ನೆಮೊನ್ನೆಯ ಹಿಂದಿ ಮಾತಾಡೋರಲ್ಲ. pic.twitter.com/BH5Tlcdqm3
30 செகன்ட் ஓடும் அந்த வீடியோவில், இரண்டு படகுகளில் ஏராளமானோர் படகு சவாரி மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது, ஒரு வட மாநில கும்பல் ஒன்று பக்கத்து படகில் இருந்த பெண்கள் குழுவிடம் ஹிந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். சிறிது நேரம் அமைதியாக இருந்த பெண்கள் குழுவில் இருந்த ஒரு பெண் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து "எங்களை நீங்கள் ஹிந்தி பேச சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். எங்கே நீங்கள் முடிந்தால் கன்னடத்தில் பேசுங்கள் பார்ப்போம்" என்று குரலெழுப்பியுள்ளார். தொடர்ந்து, அங்கிருந்த வடமாநில கும்பல் ஹிந்தி...ஹிந்தி... என்று கத்த, மீண்டும் பெண்கள் கன்னடம்... கன்னடம்... என்று கத்தியுள்ளனர்.
தற்போது, இந்த வீடியோ இணையத்தில் படு வேகமாய் வைரலாகி வருகிறது. மேலும், பலரும் ஹிந்தி மொழி திணிப்பு எதிராக அதிகளவில் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்