ஹால் டிக்கெட் தராததால் தற்கொலை முயற்சி.. மன உளைச்சல்.. துணைத்தேர்வில் சாதித்த மாணவி
தேர்விற்கு ஹால்டிக்கெட் தராததால் தற்கொலை முயற்சி செய்த மாணவி தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்த மாணவி கிரிஷ்மா(16). இவர் தன்னுடைய 9ஆம் வகுப்பில் 95 சதவிகிதத்துடன் தேர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின்னர் தன்னுடைய பத்தாம் வகுப்பு தேர்விற்காக கொரோனா கால நெருக்கடியிலும் சிறப்பாக தயாராகி வந்துள்ளார். அந்த சமயத்தில் இவருடைய பெற்றோர் குடும்ப சூழ்நிலை காரணமாக சரியாக பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். இதனால் கிரிஷ்மாவிற்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஹால்டிக்கெட் கொடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மனம் உடைந்த கிரிஷ்மா தன்னுடைய வீட்டில் கடந்த ஜூலை மாதம் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
எனினும் இவருடைய குடும்பத்தினர் உடனடியாக அதை பார்த்ததால் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றியுள்ளனர். அதன்பின்னர் கர்நாடகா மாநில கல்வி அமைச்சர் சுரேஷ் குமார் நேரில் சென்று கிரிஷ்மாவை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் கிரிஷ்மாவிற்கு 10 வகுப்பு துணை பொதுத்தேர்வில் எழுத வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்தார். அத்துடன் தற்போது நடந்த விஷயங்களை மனதில் வைத்து கொள்ளாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுரையையும் அமைச்சர் வழங்கியுள்ளார்.
அதன்படி நன்றாக படித்த கிரிஷ்மா 10-ஆம் வகுப்பு துணை தேர்வில் மொத்தம் உள்ள 625 மதிப்பெண்களுக்கு 599 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். அத்துடன் 53,155 மாணவர்கள் எழுதிய துணை தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கிரிஷ்மாவின் சாதனையை அமைச்சர் சுரேஷ் குமாரும் வெகுவாக பாராட்டி உள்ளார். முதலில் ஹால்டிக்கெட் கொடுக்கவில்லை என்று தற்கொலை முயற்சி செய்த மாணவி தற்போது தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது. மேலும் வாழ்வில் எந்த ஒரு சூழ்நிலைக்கும் பிரச்னைக்கும் தற்கொலை ஒரு முடிவாகாது என்பதை இவருடைய வெற்றி நமக்கு மீண்டும் உணர்த்தியுள்ளது.
மேலும் படிக்க: ரூபாய் தாள்களை மடித்து கட்டிய மாலை.. மொத்த மதிப்பு ரூ.5 கோடி... வாய்பிளக்க வைக்கும் போட்டோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பொழுதுபோக்குச் செய்திகளை மேலும் படிக்க:
பிரபல நடிகருடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்ட விஜய் மகன் ஜேசன்.. வைரலாகும் சுப்பர் Pic..!#JasonVijay #ActorVijayhttps://t.co/KAk8qRc1oZ
— ABP Nadu (@abpnadu) October 12, 2021