பேய் ஓட்டுவதாக கூறி பெண் பாலியல் வன்கொடுமை… தன்னைத்தானே கடவுள் எனக் கூறிக்கொண்ட சாமியார் கைது!
தனக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதனை போக்குவதற்காகவும் மோடி நகரில் உள்ள ஒரு போலி சாமியாரை அணுகிய பாதிக்கப்பட்ட பெண், பிணைக்கைதியாக வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
![பேய் ஓட்டுவதாக கூறி பெண் பாலியல் வன்கொடுமை… தன்னைத்தானே கடவுள் எனக் கூறிக்கொண்ட சாமியார் கைது! Ghaziabad Woman held hostage raped by self proclaimed godman on pretext of exorcism accused nabbed பேய் ஓட்டுவதாக கூறி பெண் பாலியல் வன்கொடுமை… தன்னைத்தானே கடவுள் எனக் கூறிக்கொண்ட சாமியார் கைது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/23/c07d99f1eecb94f7d575550099dbc7381663917768938109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக்கொண்டு, பேயோட்டுதல் என்ற பெயரில் சாமியார் ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலி சாமியார் கைது
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், போலிச் சாமியார்களின் லீலைகளை அதிகரித்து விட்டன. தனக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதனை போக்குவதற்காகவும் ஒரு போலி சாமியாரை அணுகிய பாதிக்கப்பட்ட பெண், பிணைக்கைதியாக வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் போலிச் சாமியார் காஜியாபாத்தில் கைது செய்யப்பட்டார். மக்களின் மூட நம்பிக்கைகளையும் பயன்படுத்தி பலனடையும் சாமியார்கள் அதிகரித்துவிட்டனர் என்றும், அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
நான் கடவுள்
காவல்துறையினர் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண் பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். எனவே அவர் தனது கணவருடன் மோடி நகரின் கிடோடா கிராமத்தில் உள்ள தன்னை தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சாமியாரை சிகிச்சைக்காக சந்தித்துள்ளார் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பேயோட்டும் சாக்கில்…
குற்றம் சாட்டப்பட்ட போலிச் சாமியார் அந்த பெண்ணுக்குள் ஆவி இருப்பதாகவும், தீய ஆவிகளை அகற்றுவதற்காக அவர் இங்கே அடிக்கடி வர வேண்டி இருக்கும் என்றும் கூறியுள்ளார். அந்த பெண் அடிக்கடி அவரது வீட்டிற்கு சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளார். கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி, பேயோட்டுதல் செய்யும் சாக்குப்போக்கில் போலிக் கடவுள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மைனராக இருந்த காலத்தில் இருந்தே…
உடனடியாக அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்து நிவாரி காவல்நிலையத்தில் அந்த போலிக் கடவுள் மீது வழக்குப் பதிவு செய்தார். போலீஸ்காரரின் மகளான அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த 58 வயது போலிச் சாமியார் கைது செய்யப்பட்டார். அந்த பெண்ணை மைனராக இருந்த காலத்திலிருந்தே இந்த போலி ‘பாபா’ துஷ்பிரயோகம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த செப்டம்பர் 11 அன்று குற்றம் சாட்டப்பட்டார்.
காவல்துறையினர் கூற்று
கடந்த 12 ஆண்டுகளில், தந்தை (காவலர்) தனது தாய் மற்றும் மனைவிக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அந்த சாமியாருக்கு கொடுத்ததாக போலீஸ் அதிகாரி கூறினார்.
"சடங்குகளின் சாக்குப்போக்கில், அவர் 2019 முதல் பாதிக்கப்பட்ட பெண்ணை பலமுறை அவர் மைனராக இருந்தபோதே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவருடைய அந்தரங்க புகைப்படங்களை எடுத்து, இந்த படங்களை இணையத்தில் பதிவேற்றுவேன் என்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வதை தொடர்ந்துள்ளார். அந்த போலிச் சாமியார் அவருக்காகத்தான் அந்த பெண் பூமிக்கு வந்தார் என்றெல்லாம் கூட பிதற்றுகிறார்", என்று போலீசார் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)