முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் ரோசய்யா காலமானார்: ஐதராபாத்தில் உயிர் பிரிந்தது!
முன்னாள் தமிழக ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ரோசய்யா(88) காலமானார்.
முன்னாள் தமிழக ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ரோசய்யா(88) காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் இன்று காலை மரணமடைந்தார்.
ஆகஸ்ட் 31, 2011 முதல் ஆகஸ்ட் 30, 2016 வரை அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டார்.
குறிப்பு :
கொனியேட்டி ரோசய்யா 4 ஜூலை, 1933 ம் ஆண்டு பிறந்தார். இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியான இவர் பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார். மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றிய இவரது பங்கு பெரிதும் பாராட்டப்பட்டது.
We are profoundly saddened upon the news of K. Rosaiah Garu passing away.
— INC Andhra Pradesh (@INC_Andhra) December 4, 2021
His wisdom, and astute leadership is an inspiration for the party.
May his soul rest in peace. pic.twitter.com/7bCbYhIL4R
ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். கட்சித் தலைமையின் கட்டளைக்கிணங்க முதல்வராக பணியாற்றிய ரோசய்யா நவம்பர் 24, 2010 அன்று தமது சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Congress President @RahulGandhi felicitates Shri K Rosaiah, former CM of Andhra Pradesh & former Governor of Tamil Nadu. pic.twitter.com/cQhUBtUJit
— Congress (@INCIndia) October 20, 2018
பதவிகள் :
- 1968, 1974 மற்றும் 1980 ஆந்திர மாநில சட்டப்பேரவை
- 1977-1979 ஆந்திர மாநிலம் தொழில்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர்.
- 1978-1979, 1983-1985 ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர்.
- 1979-1980 ஆந்திர மாநில சாலை மற்றும் கட்டிடத்துறை அமைச்சர்.
- 1980-1981 ஆந்திர மாநில வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்.
- 1982-1983 ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.
- 1989-1990 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், போக்குவரத்து, உயர்கல்வி, கைத்தறி மற்றும் கதர்துறை, அமைச்சர்.
- 1991-1992 ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
- 1992-1994 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
- 1995-1997 ஆந்திரமாநிலம் காங்கிரஸ் கட்சித் தலைவர்.
- 1998 நரசரொபேட் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
- 2004-2009 ஆந்திர மாநில நிதி, திட்டம்,குடும்ப நலத்துறை அமைச்சர்.
- 2009-2010 ஆந்திர மாநில முதல்வர்.
- 2011-2016 தமிழ்நாடு ஆளுநர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்