மேலும் அறிய

Flipkart: ஐபோனுக்கு பதில் சோப் அனுப்பிய ப்ளிப்கார்ட்..! சூப்பர் தண்டனை வழங்கிய நீதிமன்றம்..! என்ன தெரியுமா?

ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த ஒருவருக்கு சோப் கிடைக்க பெற்ற புகாரில் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

Flipkart : ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த ஒருவருக்கு சோப் கிடைக்க பெற்ற புகாரில் இழப்பீடு வழங்க  நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. நிறுவனங்களும் பயனாளர்களின் தேவையை உணர்ந்து பண்டிகை காலம், விழாக் காலங்களில் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை அறிவிக்கின்றன. ஆன்லைன் வணிகத்தில் ஆர்டர் செய்ததற்கு மாறாக வேறொரு பொருட்கள் டெலிவரி செய்யப்படும் செய்திகளை நாம் அடிக்கடி கேட்கிறோம் இல்லையா? அப்படி ஒரு சமபவம் டெல்லி மாநிலத்தில் நடந்துள்ளது.

ஐபோனுக்கு பதில் துணி சோப்:

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் மாணவர் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப் கார்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஐபோன் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வந்த ஆர்டருக்கான பார்சலை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் அவர் ஆர்டர் செய்த ஐபோனுக்கு பதில் 140 கிராம் எடையுள்ள நிர்மா என்ற சோப் மற்றும் சிறிய கிபேட் போன் அதில் இருந்துள்ளது. ஐபோன் என்று நினைத்து ரூ.48,999 செலுத்தியுள்ளார். இதனை அடுத்து, அந்த மாணவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 

ஐபோனுடன் 25 ஆயிரம் இழப்பீடு:

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில்,  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு பிளிப்கார்ட்  நிறுவனம் 8 வாரங்களுக்குள் ஐபோனுக்கு செலவு செய்த தொகையுடன் ரூ.25,000 இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், "தற்போது ஆன்லைன் ஷாப்பிங் ஆப் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தயாரிப்புகளை விற்ற பிறகு ஆன்லைன் நிறுவனங்களின் பொறுப்புகள் முடிவடையாது. அவர்களின் பிரச்சனைக்கு உரிய பதிலளித்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

நிறுவனங்கள் வாடிக்கையார்களை ஏமாற்றி, அவர்களின் பணத்தை பெற்றுக் கொண்டு தவறான பொருட்களை அனுப்புவதன் மூலமோ, நுகர்வோரின் பணத்தை அபகரிக்க எந்த உரிமையும் கிடையாது” என்று ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது.  

அலட்சியமாக பதிலளித்த ப்ளிப்கார்ட்:

முன்னதாக, இதுபோன்று சமீபத்தில், டெல்லியில் ஒரு நபர் தந்தைக்காக ப்ளிப்கார்ட்டில் விலையுயர்ந்த லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்த பார்சலில் காதி கிராப்ட் சார்பில் தயாரிக்கப்படும் துணி துவைக்கும் சோப்பு வந்துள்ளது. இதைக்கண்டு யாஷஸ்வி ஷர்மா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுதொடர்பாக ப்ளிப்கார்ட்டை தொடர்பு கொண்டபோது, ப்ளிப்கார்ட் நிறுவனத்தினர் ஓ.டி.பி.யை அளிப்பதற்கு முன்பு பொருட்களை சரிபார்க்காததற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அலட்சியமாக பதிலளித்ததாகவும் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார். மீபகாலமாக, இணையத்தில் ஆர்டர் செய்து பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்று ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்கள் கிடைக்கப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தக்க தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க

Twitter blue tick: ப்ளூ டிக்கிற்கு காசு கட்டிட்டீங்களா? - சலுகைக்கு நாள் குறித்த ட்விட்டர் நிறுவனம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget