மேலும் அறிய

ISRO GSLV: அடுத்த சாதனைக்கு தயாரான இஸ்ரோ! ஜி.எஸ்.எல்.வி எப்போது விண்ணில் செலுத்தப்படுகிறது? முழு விவரம்

பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இஸ்ரோ தரப்பில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இன்சாட் 3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே இஸ்ரோ தரப்பில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் மற்றும் FCPS செல்ல விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

அடுத்த மாதம் ஜி.எஸ்.எல்.வி:

பூமியிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் விண்ணில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்யும் செல்லில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதால் தண்ணீர் மற்றும் வெப்பம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 6 ஆம் தேதி சூரியனை ஆராயும் நோக்கில் விண்ணிற்கு செலுத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக எல்1 எனப்படும் லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது. இப்படி இந்த ஆண்டு தொடக்கம் முதலே அடுத்தடுத்து சாதனை இஸ்ரோ படைத்து வருகிறது. அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

இன்சாட் 3டிஎஸ்:

இதில் முக்கியமாக இன்சாட் 3டிஎஸ் என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது. அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் ஜி.எஸ்.எல்.வி எப்14  ராக்கெட் திரவ உந்துசக்தியை பயன்படுத்தும் மேம்பட்ட ராக்கெட்டாகும்.  இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தற்போது ராக்கெட்டில் செயற்கைக்கோள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகல் தெரிவித்துள்ளனர். இந்திய வானிலை அமைப்புக்கு (ஐ.எம்.டி.) சொந்தமானது 'இன்சாட் -3 டிஎஸ்' செயற்கைகோள். காலநிலை கண்காணிப்பு செயற்கைகோள்களின் தொடரின் ஒரு பகுதியாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதுடன் மற்றும் உந்துவிசை அமைப்பு ஒத்துழைப்பு ஆகிய அர்ப்பணிக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைகோள்களை உள்ளடக்கியது.

இன்சாட் 3 டி மற்றும் இன்சாட் 3 டிஎஸ் ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டு  செயல்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இன்சாட் 3டிஎஸ் விண்னில் செலுத்தப்பட உள்ளது.

கடந்த மே மாதம் 29 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி எப்12 ராக்கெட் மூலம் 2, 232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ் 1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது 8 மாதங்களுக்கு பின் மீண்டும் பிப்ரவரி மாதம்  முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதிக திறன் கொண்ட இந்த ராக்கெட் 3 நிலைகளுடன் கிரையோஜெனிக் திரவ உந்துசக்திகளைப் பயன்படுத்துகிறது. பி.எஸ்.எல்.வி ராக்கெட் போல் சுலபமாக இல்லாமல் சற்று சிக்கலாக இருந்தலும் இது அதிக எடையை சுமந்து செல்லும்.   

தலைப்பு செய்திகள்

கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!
கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
HIV Cases: அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Weatherman Alert : சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
America Iran War: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
Benjamin: அன்று இபிஎஸ் பதவியை பறித்ததாக கண்ணீர்.. இன்று திமுகவில் ஐக்கியம்.. கட்சி மாறிய பெஞ்சமின்!
Benjamin: அன்று இபிஎஸ் பதவியை பறித்ததாக கண்ணீர்.. இன்று திமுகவில் ஐக்கியம்.. கட்சி மாறிய பெஞ்சமின்!
Iran US War Tensions: போர்.. போர்..! அடித்து ஆடும் ஈரான்; 18 அமெரிக்க நிலைகள் தரைமட்டம்; மூடப்பட்ட ஹார்முஸ் - உச்சகட்ட பதற்றம்
போர்.. போர்..! அடித்து ஆடும் ஈரான்; 18 அமெரிக்க நிலைகள் தரைமட்டம்; மூடப்பட்ட ஹார்முஸ் - உச்சகட்ட பதற்றம்
Amar Prasath Reddy: பாஜக இன்னொரு திமுக.. அந்த கட்சியே வேண்டாம் சாமி.. விலகிய அமர்பிரசாத் ரெட்டி!
Amar Prasath Reddy: பாஜக இன்னொரு திமுக.. அந்த கட்சியே வேண்டாம் சாமி.. விலகிய அமர்பிரசாத் ரெட்டி!
Gold and silver rate today: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! சவரனுக்கு ரூ.5,600 சர சரவென சரிந்தது- 2 நாளில் அதிரடி மாற்றம்
நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! சவரனுக்கு ரூ.5,600 சர சரவென சரிந்தது- 2 நாளில் அதிரடி மாற்றம்
திடீரென மாறிய வானிலை.. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!
திடீரென மாறிய வானிலை.. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!
Embed widget