மேலும் அறிய

இது யாரு குழந்தை.. என் முகச்சாயல் இல்லை.. சைக்கோ தந்தை செய்த கொடூர காரியம்.. கர்நாடகா கொடுமை!

மனைவிக்கு பிறந்த பெண் குழந்தையின் சாயல் தன்னை போல இல்லை என்று சந்தேகப்பட்டு, குழந்தையின் வாயில் பிளாஸ்டர் ஒட்டி ஏரியில் வீசி கொலை செய்த கொடூர தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண துர்க்கம் நகரை சேர்ந்த மல்லிகார்ஜுனா சிட்டம்மா தம்பதிக்கு பிறந்து 2 மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்தது. ஓரிரு தினங்கள் முன்பு குழந்தையை தூக்கிக் கொண்டு 2 பேரும் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அழுத குழந்தையை நான் தூக்கி வைத்துக் கொள்கிறேன் என்று கூறி வாங்கி சென்ற கணவர் மல்லிகார்ஜுனா கைக்குழந்தையுடன் எங்கோ மாயமானதாக கூறப்படுகின்றது. இதையடுத்து குழந்தையுடன் சென்ற கணவரை காணவில்லை என்று மனைவி சிட்டம்மா போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அனந்தபூரில் வைத்து மல்லிகார்ஜுனாவை கண்டுபிடித்தனர். ஆனால் அப்போது அவர் கையில் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறார். பிடிபட்ட மல்லிகார்ஜுனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது யாரு குழந்தை.. என் முகச்சாயல் இல்லை.. சைக்கோ தந்தை செய்த கொடூர காரியம்.. கர்நாடகா கொடுமை!

போலீசார் விசாரணையில் மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் தனது மனைவிக்கு பிறந்த குழந்தை தன்னுடைய சாயலிலோ, தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் சாயலிலோ இல்லை என்று கூறி மல்லிகார்ஜூனா மனைவி சிட்டம்மாவிடம் மீண்டும் மீண்டும் தகராறு செய்வதை தொடர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனரீதியாக குழந்தை தனது சாயலிலேயே இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்ட மல்லிகார்ஜூனா குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று மருத்துவமனைக்கு கூட்டிச்செல்வது போல நாடகமாடி குழந்தையை தூக்கிச்சென்ற மல்லிகார்ஜூனா, அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். குழந்தையின் அழுகுரல் வெளியில் கேட்டு விடக்கூடாது என்பதற்காக வாயில் பிளாஸ்டரை ஒட்டி, குழந்தையை ஏரிக்குள் வீசி கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

இது யாரு குழந்தை.. என் முகச்சாயல் இல்லை.. சைக்கோ தந்தை செய்த கொடூர காரியம்.. கர்நாடகா கொடுமை!

இதையடுத்து ஏரிக்குள் இருந்து அந்த பெண் குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர். மணிவிமீது கொண்ட சந்தேகத்தால் கொடூர கொலையாளியான தந்தை மல்லிகார்ஜூனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது போன்ற சந்தேகங்கள் கணவன மனைவிக்கிடையே எப்போதும் எழக்கூடாதவை என்று கூறும் மருத்துவர்கள் ஒரு பெண் குழந்தை, தந்தையின் சாயலிலோ, தாயின் சாயலிலோ இல்லாமல் இருந்தால் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கர்ப்பம் தரிக்கும் முன்பாக கணவன் மனைவிக்கு இடையேயான மனநிலை, முன்னோர்களின் சாயல் போன்றவை கூட முக சாயல் மாறக்காரணமாக இருக்கும் என்கின்றனர். அதே நேரத்தில் பெரும்பாலான குடும்பங்களில் இன்றளவும் பெண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை என்றும் அதற்காக கூட இந்த பெண் குழந்தையை கொலை செய்து விட்டு குற்றத்தை நியாப்படுத்த மனைவியின் நடத்தை மீது பழி சுமத்தி இருக்கலாம் என்று மருத்துவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Embed widget