மேலும் அறிய

‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?

’இளைஞர்களின் எதிர்காலம் குறித்த போராட்டம் என்பதால் வீரியம் குறையும்போதெல்லாம் இதுபோன்ற காட்சிகளை பகிர்ந்து இளைஞர்களும் மாணவர்களும் தங்களை போராட்ட களத்திற்கு தயார்படுத்திக்கொள்கிறார்கள்’

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்தும், நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் ஒன்று கூடி போராடி வருகின்றனர். குறிப்பாக, கரப்பான் பூச்சி கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அந்த போராட்டத்தை தீவிரமடைய வைத்திருக்கின்றனர். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்  நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர் கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் தமிழ்நாட்டிலும் பரவியிருக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் தன்னெழுச்சியாக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடங்கியிருக்கிறது. தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் தமிழ்நாடும் அதன் மாணவர்களும் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் குதித்துள்ளனர்.

வைரலாகும் EXAM வெப் சீரிஸ் பட காட்சிகள்

இதனையடுத்து சமூக வலைதளங்களில் இயக்குநர் சற்குணத்தின் வெப் சீரிஸ் திரைப்படமான EXAM காட்சிகள் வைரலாகத் தொடங்கியிருக்கின்றன. அந்த படமே அரசு தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பானதுதான் என்பதால் அதில் உள்ள காட்சிகளை எடுத்து இளைஞர்களும் மாணவர்களும் தங்கள் போராட்ட கருவியாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது டெல்லியில் போராடும் இளைஞர்களும் EXAM வெப் சீரிஸ் படத்தின் காட்சிகளை தங்களது சமூக வலைதள பக்கங்களிலும், வாட்ஸ்-அப் குழுக்களிலும் பதிவு செய்து, போராட்ட களத்திற்கான தீயை மேலும் உஷ்ணப்படுத்தி வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ZAKIE AKRAM (@zakstudioz)

தொடரும் போராட்டம்

நாடாளுமன்றம் நடைபெற்று வரும் நிலையில், நாளுக்கு நாள் நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தங்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளை செய்யும்போதெல்லாம் அரசு Exam படம் உள்ளிட்ட வீடியோக்களை குழுக்களில் பகிர்ந்து, இந்த போராட்டதின் வீரியம் குறையாமல் மாணவர்கள் பார்த்துகொள்கின்றனர். இளைஞர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட போராட்டம் என்பதால் இதில் ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் இந்த முன்னெடுப்பை கைவிடக் கூடாது என்பதிலும் இளைஞர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் சதீஷன், கர்நாடக முதல்வர் சீத்தராமையா உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், இன்று நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதோடு, ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களை சந்திக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும், தமிழ்நாட்டிலும் அந்த போராட்டத்தை தீவிரப்படுத்த அவர்கள் ஆயத்தமாகி வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget