News Wrap | Abp headlines டிசம்பர் மாத விலையேற்றம் முதல் அஜித் ‘தல’ ஸ்டேட்மெண்ட் வரை - இன்றைய டாப் செய்திகள்
காலை முதல் தற்போது வரை வரையிலான முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாடு:
ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
அதிமுக செயற்குழு அறிவிப்பு: அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம். அன்வர்ராஜா, நிலோபர் கபில் உள்ளிட்ட சிறுபான்மையின சமூகத்தினர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இசுலாமியரான தமிழ் மகன் உசேனுக்கு பொறுப்பு
கழக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். pic.twitter.com/TprTtteLF1
— AIADMK (@AIADMKOfficial) December 1, 2021
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும், இது எனது விருப்பம் மட்டுமல்ல மக்களின் விருப்பம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
செம்மஞ்சேரி பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம் தேவைப்படும் உதவிகளை கேட்டறிந்தார்.
இந்தியா:
மாநிலங்களவை நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.10,207பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.29 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
இன்று எல்லைப் பாதுகாப்புப் படையின் தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வணிகம்:
இன்று (டிசம்பர் 1) முதல் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும், கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு செயல்பாட்டு கட்டணமும் (Processing fee),அதனுடன் வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, தனது நிறுவனத்தின் 50% பங்குகளை விற்றுள்ளார். நவம்பர் மாதத்தில் மட்டும் பல தொகுப்பளாக 840,000 பங்குகளை 285 மில்லியன் அமெரிக்கா டாலருக்கு விற்றிருப்பதாக பங்குச் சந்தையில் அவர் தாக்கல் செய்த ஆவணங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலமாக ஈஎம்ஐ பரிவர்த்தனை செய்யும்போது இனி 99 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இதனுடன் சிறு தொகை வரியாகவும் வசூல் செய்யப்படும். இந்தப் புதிய விதிமுறை இன்று முதல் ( டிசம்பர் 1ஆம் தேதி) அமலுக்கு வந்தது
சினிமா:
என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித் குமார் கேட்டுக் கொண்டார்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் வரும் டிசம்பர் 3 வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு:
ஐசிசி ஆடவர் டெஸ்ட் தரவரிசை பட்டியல் பந்து வீச்சாளர்கள் பிரிவில் இந்தியாவின் அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார்.
ஐசிசி ஆடவர் டெஸ்ட் தரவரிசை பட்டியல் பேட்டிங் பிரிவில் இந்தியாவின் ரோஹித் ஷர்மா 5வது இடத்திலும் விராத் கோலி 6வது இடத்திலும் உள்ளனர்.
ஸ்பெயினில் வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ள உலக பேட்மிண்டன் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்க போவதில்லை என்று சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்