5 மாநில தேர்தல் - பேரணி, பிரச்சாரத்துக்கு தடையை நீட்டித்த தேர்தல் ஆணையம்
வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு அனுமதி இருந்த நிலையில் தற்போது 10 பேருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் கொரோனா காரணமாக 22ஆம் தேதி வரை தடை இருந்த நிலையில் தற்போது 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு அனுமதி இருந்த நிலையில் தற்போது 10 பேருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பொதுக்கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிரச்சாரங்களை வீடியோ வேன்கள் மூலம் நடத்திக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.
Election Commission of India extends the ban on physical rallies and roadshows till January 31, 2022.#AssemblyElections2022 pic.twitter.com/emL7ypeCgt
— ANI (@ANI) January 22, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்