மேலும் அறிய

Covid-19 Mask Usage : மாஸ்க் போடுவதால் நாம் கார்பன்-டை-ஆக்சைடு சுவாசிக்கிறோமா?

பரிசோதனையில் கலந்து கொண்ட அனைவருக்கும், 30 நிமிடங்கள் எந்த பணியும் செய்யாமல் முகக்கவசம் அணிவிக்கப்பட்டனர். முதல் 6 நிமிடங்களுக்குப் பிறகும், 30 நிமிடங்களுக்கு முடிவிலும் pCO2  அளவு கணக்கிடப்பட்டது. இதனையடுத்து, முகக்கவசம் அணிந்தவாரே ஆறு நிமிட நடைக்கு உட்படுத்தப்பட்டனர்.மீண்டும், இவர்களது pCO2  அளவை ஆய்வாளர்கள் கணக்கிட்டனர்.  இந்த சோதனை முடிவில், முகக்கவசம் அணிவதினால்  நெடுங்கால சுவாச அடைப்பு நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியில் எந்த பின்னடைவும் இல்லை என்று கண்டறியப்பட்டது.     

தொற்றைத் தடுப்பதில் முகக்கவசம் அணிவது முக்கியப் பங்கு வகிப்பதை பல்வேறு ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்நிலையில், நீண்ட நேரம் முகக்கவசம் அணிவதால் சுவாசப் பிரச்னை வருவதாகவும், கார்பன்-டை-ஆக்சைடு  நச்சுத் தன்னமையாக உருவாகி, உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.   

இந்த கூற்றுக்குப் பின்னால் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை இல்லை என்பதே அறிவியலாளர்களின் நிலைப்பாடு. 

நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் American Thoracic Society என்ற ஆய்வு நிறுவனம்  "Effect of Face Masks on Gas Exchange in Healthy Persons and Patients with Chronic Obstructive Pulmonary Disease" என்ற ஆய்வுக் கட்டுரையை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. 

சில மாதங்களுக்கு முன்பாக, நெடுங்கால சுவாச அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease ) உள்ள 15 நோயாளிகள் முகக்கவசம் அணிவதினால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். "Effect of Face Masks on Gas Exchange in Healthy Persons and Patients with Chronic Obstructive Pulmonary Disease"  என்ற இந்த ஆய்வுக் கட்டுரையை, நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் American Thoracic Society என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டது. 

பொதுவாக சுவாச அடைப்பு நோயில் நுரையீரலுக்குச் செல்லும் மற்றும் நுரையீரலில் இருந்து வெளிச்செல்லும் காற்றின் அளவு மட்டுப்படுத்தப்படுகின்றது.  சிஓபிடியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இயல்பாகவே இரத்தத்தில் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு காணப்படுகிறது. 

சிஓபிடியால்  பாதிக்கப்பட்ட 15 நபர்கள், நுரையீரல் பாதிப்பு இல்லாத 15 நபர்கள் என இருவகையாக பிரிக்கப்பட்டு முககவசத்தின் தாக்கங்களை ஆய்வாளர்கள் சோதனை  நடத்தினர். 

பரிசோதனையில் கலந்து கொண்ட அனைவருக்கும், 30 நிமிடங்கள் எந்த பணியும் செய்யாமல் முகக்கவசம் அணிவிக்கப்பட்டனர். முதல் 6 நிமிடங்களுக்குப் பிறகும், 30 நிமிடங்களுக்கு முடிவிலும் pCO2  அளவு கணக்கிடப்பட்டது. இதனையடுத்து, முகக்கவசம் அணிந்தவாரே ஆறு நிமிட நடைக்கு உட்படுத்தப்பட்டனர்.மீண்டும், இவர்களது pCO2  அளவை ஆய்வாளர்கள் கணக்கிட்டனர்.  

இந்த சோதனை முடிவில், முகக்கவசம் அணிவதினால்  நெடுங்கால சுவாச அடைப்பு நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியில் எந்த பின்னடைவும் இல்லை என்று கண்டறியப்பட்டது.     

Covid-19 Mask Usage : மாஸ்க் போடுவதால் நாம் கார்பன்-டை-ஆக்சைடு சுவாசிக்கிறோமா?

சிஓபிடி நோயால் பாதிக்கப்படாதவர்களிடம் ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு கொஞ்சம் கூட அதிகரித்துக் காணப்படவில்லை.

சிஓபிடி நோய் உள்ளவர்களிடத்திலும் கூட  முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு கார்பன் டை ஆக்சைடு அளவில் மாற்றம் காணப்படவில்லை. ஆனால், 6 நிமிட நடைப்பயிற்சிக்குப் பிறகு pCO2 அளவு  0.97 ± 2.4 என்ற அளவில் மாற்றம் காணப்பட்டது. இருப்பினும், இந்த அளவு மருத்துவ ரீதியாக எந்தவொரு பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

பின் மூச்சு வாங்குவது ஏன்? 

பொதுவாக, மாடிப்படியில் ஏறும் போதும், செங்குத்தான சரிவு பகுதியில் நடக்கும் போதும் மூச்சு வாங்குவது இயல்பு தான். இது அனைத்துமே மூச்சியக்க கோளாறுகள்  என்று பொருள் கொள்ள முடியாது. அதே போன்று, முகக்கவசத்தை இறுக்கமாக அணிந்தால் சில அசவுகரியங்களை சந்திக்க நேரிடம். சரியான நடைமுறைகள் பின்பற்றி நாம் முகக்கவசம் அணிய வேண்டும். 

Covid-19 Mask Usage : மாஸ்க் போடுவதால் நாம் கார்பன்-டை-ஆக்சைடு சுவாசிக்கிறோமா?

முகக்கவசம் அணியும் பழக்கத்தை உருவாக்குவது மிகவும் கடினமான ஒன்று தான். அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அன்றாட வாழ்வில் இதை அத்தியாவசியமான பகுதி என்று ஆக்க வேண்டும். யாரும் இல்லாத போது, வீட்டிற்குள் நாம் முகக்கவசம் அணிவதை குறைத்துக் கொள்ளலாம். மருத்துவமனை, மளிகைக் கடை, உணவுக் கடை போன்ற பொது இடங்களில் இரண்டு அடுக்கு முககவசங்களை அணிவது மிகவும் நல்லது. மற்ற இடங்களில் ஒற்றை முகக்கவசத்தை அணிவது போதுமானது.    நாம் வீட்டிலேயே  “சார்ஸ் - கோ 2” கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்கான முககவசங்களை நம்மால் தயாரிக்க முடியும்.  இதுகுறித்த விரிவான கையேட்டைப் பதிவிறக்கம் செய்ய http://bit.ly/DIYMasksCorona இணைய முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Citroen C3: ரூபாய் 6 லட்சம்தான் பட்ஜெட்..  Citroen C3 மைலேஜ், தரம் எப்படி? முழு விவரம் உள்ளே
Citroen C3: ரூபாய் 6 லட்சம்தான் பட்ஜெட்.. Citroen C3 மைலேஜ், தரம் எப்படி? முழு விவரம் உள்ளே
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Embed widget