மேலும் அறிய

ஐஸ்க்ரீம் ஸ்பூனை விழுங்கிய நாய்க்குட்டி.. வளர்த்த குடும்பத்துக்கு நிம்மதி அளித்து அசத்திய மருத்துவர்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நாய்க்குட்டி ஒன்று ஐஸ்க்ரீம் ஸ்பூனை விழுங்கியது. அறுவைசிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அதனை அகற்றினர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நாய்க்குட்டி ஒன்று ஐஸ்க்ரீம் ஸ்பூனை விழுங்கியது. அறுவைசிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அதனை அகற்றினர். கால்நடை மருத்துவர் நரேந்திர பர்தேசி தலைமையிலான குழுவினர் அந்த நாய்க்குட்டிக்கு அறுவைசிகிச்சை செய்தனர்.

12 மாத குட்டி..

புனேவைச் சேர்ந்தவர் சேகர். அவர் கோல்டன் ரிட்ரீவர் வகை நாய்க்குட்டியை வளர்த்துவந்தார். 12 வாரங்களே நிரம்பிய அந்தக்குட்டியின் பெயர் நோரா. நோரா விளையாட்டாக ஐஸ்க்ரீம் ஸ்பூனை விழுங்கியது. பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்கிய நோராவுக்கு சில நிமிடங்களிலேயே நோரா வித்தியாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. உடனே நோராவை அதன் உரிமையாளர் சேகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே நோராவுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. மருத்துவர் சில மருந்துகளைக் கொடுத்தார்.

எக்ஸ்ரேவில் வித்தியாசமாக எதுவும் தென்படவில்லை என்று மருத்துவர் கூறியதால் நோராவை வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டனர். ஆனால் நோரா முன்புபோல் சாப்பிட மறுத்துவிட்டது. விளையாடவும் வராமல் சோகத்தில் இருந்தது. அப்போது சேகர் குடும்பத்தார் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர். அப்போதுதான் சேகர் குடும்பத்தினருக்கு நண்பர் ஒருவர் மூலம் மருத்துவர் பர்தேசி அறிமுகப்படுத்தப்பட்டார். உடனே சேகர் குடும்பத்தார் நோராவை மருத்துவர் நரேந்திர பர்தேசியிடம் தூக்கிச் சென்றனர். அவர் நோராவை சோதனை செய்துவிட்டு நோராவுக்கு கேஸ்ட்ரோஸ்கோப்பி செய்ய பரிந்துரைத்தார். உடனே அந்தச் சோதனை செய்யப்பட்டது. நோரா மிகவும் வாட்டமாக இருந்தது. முதலில் மருத்துவரும் வயிற்றில் தீவிர அல்சர் புண் இருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் நோராவுக்கு கேஸ்ட்ரோஸ்கோப்பி பரிந்துரைத்தார். கேஸ்ட்ரோஸ்கோப்பி செய்ய நாய்க்குட்டிக்கு அனஸ்தீஸியா எனப்படும் மயக்க மருந்து கொடுப்பது அவசியமாக இருந்தது.

ஐஸ்க்ரீம் ஸ்பூனை விழுங்கிய நாய்க்குட்டி.. வளர்த்த குடும்பத்துக்கு நிம்மதி அளித்து அசத்திய மருத்துவர்

அதனால் கேஸ்ட்ரோஸ்கோப்பிக்கு முன்னதாக நோராவுக்கு அனஸ்தீஸியா கொடுக்கப்பட்டது. பின்னர் கேஸ்ட்ரோஸ்கோப்பை மருத்துவர் நோராவின் வாய்க்குள் செலுத்தி வயிற்றை ஆராய்ந்தார். அந்த கேஸ்ட்ரோஸ்கோப்பில் மறுமுனையில் கேமராவும் லைட்டும் இருக்கும். அதை உள்ளே செலுத்தி பார்த்தபோது மருத்துவர் அதிர்ந்து போனார். நோராவின் வயிற்றில் குட்டி பிளாஸ்டிக் ஐஸ்க்ரீம் ஸ்பூன் இருந்தது, உடனே மீண்டும் கேஸ்ட்ரோஸ்கோப்பை வெளியில் எடுத்த மருத்துவர் அதில் ஒரு சிறிய ஃபோர்செப்ஸ் எனப்படும் இடுக்கியை செலுத்தி லாவகமாக ஸ்பூனை வெளியே எடுத்தார். இது கத்தியின்றி ரத்தமின்றி செய்யப்பட்ட அறுவை சிகிச்சை. 45 நிமிடங்கள் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின் அன்று மாலையே நோரா வீட்டுக்கு அனுப்பப்பட்டது. நோரா இப்போது பழையபடி துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறது. 

இது குறித்து சேகர் குடும்பத்தினர் கூறுகையில், நோரா ப்ளாஸ்டிக் ஸ்பூனை விழுங்கியதை அறிந்து நாங்கள் மிகவும் வருந்தினோம். எங்கள் அஜாக்கிரதையும் கூட இருந்ததாக உணர்ந்தோம். ஆனால் மருத்துவர் நரேந்திர பர்தேசி எங்கள் நோராவை காப்பாற்றினார். நோரா இப்போது பழையமாதிரி சாப்பிடுகிறது, விளையாடுகிறது என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
Realme P4 Power: இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
Gold Silver Rate Jan.20th: ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் தங்கம்; இன்று ஒரே நாளில் ரூ.3,600 உயர்வு; வெள்ளி கிராம் ரூ.22 அதிகரிப்பு
ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் தங்கம்; இன்று ஒரே நாளில் ரூ.3,600 உயர்வு; வெள்ளி கிராம் ரூ.22 அதிகரிப்பு
Embed widget