Diya : 1000 கிலோ எடைகொண்ட தீபம்.. 3,560 லிட்டர் எண்ணெய்.. நிகழ்த்தப்பட்ட உலக சாதனை..
பஞ்சாப் மாநிலம் - மொஹாலியில் 1,000 கிலோ இரும்பு பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய தீபத்தை 10,000க்கும் மேற்பட்டோர் இனைந்து தோராயமாக 3,560 லிட்டர் எண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றினர்.
பஞ்சாப் மாநிலம் - மொஹாலியில் 1,000 கிலோ இரும்பு பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய தீபத்தை ஏற்றி சாதனை படைத்ததுள்ளது.மொஹாலியில் ஹீரோ ஹோம்ஸில் வசிப்பவர்கள் 4,000 பேர் உடன் சேர்ந்து சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் இணைந்து தோராயமாக 3,560 லிட்டர் ஆர்கானிக் மற்றும் தீபத்திற்கு ஏற்ற எண்ணெய்களை கலந்து தீபத்தை ஏற்றினர்.
எஸ்ஏஎஸ் நகர்: பஞ்சாபின் மொஹாலியில் உள்ள ஹீரோ ஹோம்ஸ், வளாகத்தில் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய தீபத்தின் மூலம் உலக சாதனை நிகழ்த்தியது. இது தோராயமாக 1,000 கிலோ எஃகு கொண்டு தயார் செய்யப்பட்டது. மேலும் இந்த தீபம் 3.37 மீட்டர் அகலம் கொண்டது. மொஹாலியில் ஹீரோ ஹோம்ஸில் வசிப்பவர்கள் 4,000 பேர் உடன் சேர்ந்து சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் இனைந்து தோராயமாக 3,560 லிட்டர் ஆர்கானிக் மற்றும் தீபத்திற்கு ஏற்ற எண்ணெய்களை கலந்து தீபத்தை ஏற்றினர். தீபாவளி பண்டிகையில் அமைதியை மையமாக வைத்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ நீதிபதிகள் முன்னிலையில் பிரமாண்டமான இந்த விளக்கு ஏற்றப்பட்டது. கின்னஸ் சாதனை புத்தகத்தின்படி, இந்த தீபம் 3,560 லிட்டர் எண்ணெயால் ஏற்றப்பட்டுள்ளது என்றும் உலகின் மிகப்பெரிய தீபம் என்ற தகுதி பெற்றுள்ளது என கூறப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கேஜே சிங் பிவிஎஸ்எம்-ஏவிஎஸ்எம், முன்னாள் ஜிஓசி வெஸ்டர்ன் கமாண்ட் குத்துவிளக்கேற்றி வைத்தார். அவர் கூறுகையில், "பாரம்பரிய முறைப்படி தீபாவளியைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், இதன் மூலம் அமைத்திக்கான சமூகச் செய்தியைப் பிறரிடம் கொண்டு செல்லவும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. பல தாக்குதல்களை எதிர்கொண்ட பஞ்சாப் இப்போது அமைதியின் மிகப்பெரிய சின்னத்தின் இடமாக திகழ்கிறது" எனவும் கூறினார்.
ஹீரோ ரியாலிட்டியின் சிஎம்ஓ ஆஷிஷ் கவுல் மேலும் கூறுகையில், "தீபாவளி அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதைக் குறிக்கிறது. தீபத்தில் உள்ள எண்ணெய், பிராந்தியங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் பிற கலாச்சார நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் பல்வேறு நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அமைதி மற்றும் ஒற்றுமைக்கான உறுதியை குறிக்கிறது."
பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கார்கிலில் இருக்கக் கூடிய எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் உற்சாகமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை 2015ஆம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2017-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணிபுரியும் வீரர்களுடனும், 2018-ம் ஆண்டு உத்தரகாண்டில் பணியாற்றும் வீரர்களுடனும், 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் வீரர்களுடனும் தீபாவளியை கொண்டாடினார்.
2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார். இந்நிலையில், இந்த ஆண்டு கார்கிலில் இருக்கக் கூடிய எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினார். அப்போது ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் அனைவரும் என்னுடைய குடும்பம் எனவும், உங்கள் மத்தியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது பெருமைக்குரியது என தெரிவித்தார்.
மேலும், இந்தியா என்பது நாடு மட்டுமல்ல, தியாகம், அன்பு, இரக்கம், மகத்தான திறமை, தைரியம் உள்ளிட்டவற்றை கலந்து தான் இந்தியா உருவாகியுள்ளது என தெரிவித்தார்.