மேலும் அறிய

Disney Layoff : தொடரும் பணிநீக்கங்கள்...இயக்குநர், தயாரிப்பாளருக்கே ஆப்பு வைத்த டிஸ்னி..அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

பிரபல அனிமேஷன் படமான லைட் இயர் படத்தின் இயக்குநர் மற்றம் தயாரிப்பாளர் உட்பட 75 பேரை பணிநீக்கம் செய்துள்ளது டிஸ்னி நிறுவனம்.

Disney Layoff : பிரபல அனிமேஷன் படமான லைட் இயர் படத்தின் இயக்குநர் மற்றம் தயாரிப்பாளர் உட்பட 75 பேரை பணிநீக்கம் செய்துள்ளது டிஸ்னி.

பணி நீக்கம்:

உலக நாடுகளில் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. 

சமீபத்தில், 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்தது. பணி நீக்கத்தை பொறுத்தவரையில், அமேசான் நிறுவனமும் பல்வேறு கட்டமாக மேற்கொண்டு வருகிறது. சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலை யை விட்டு நீக்குவதாக அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து, திரைப்படத்துறை, பொழுதுபோக்கு துறைகளில் பிரபலமாக விளங்கும டிஸ்னி நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளது.  சமீபத்தில் 3வது கட்ட பணிநீக்கத்தை அறிவித்தது. அதில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

டிஸ்னி பிக்சர்

இந்நிலையில், டிஸ்னியின் பிக்சர் அனிமேஷன் ஸ்டூடியோ நிறுவனத்தில் இருந்து சுமார் 75 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக பிரபல அனிமேஷன் படமான 2022ஆம் ஆண்டு வெளியான லைட்இயர் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளரை பணிநீக்கம் செய்துள்ளது டிஸ்னி நிறுவனம். அதன்படி, Angus Maclane மற்றும் Galyn  Susman உட்பட 75 பேரை பணிநீக்கம் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த அங்கஸ் மேக்லேன்?

 அங்கஸ் மேக்லேன் ஒரு அமெரிக்க அனிமேட்டர். 1997ஆம் ஆண்டு  முதல் disney Pixar-யில் பணிபுரிந்து வந்தார். இவவர் Geri's என்ற கேமில் ஒரு அனிமேட்டராக தனது பணியை தொடங்கினார். பின்னர் 20 திரைப்படங்கள் மற்றும் பல்வேறு கேமிஸ்களை உருவாக்கி உள்ளார். அதன்பின், 2005 ஆம் ஆண்டில், தி இன்க்ரெடிபிள்ஸில் (The Incredibles) என்ற படம் இவருக்கு துறையில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்கு  அனிமேஷனுக்காக அன்னி விருதை (Annie Award) வென்றார். 2014ஆம் ஆண்டில் டாய் ஸ்டோரி ஆஃப் டெரர் படத்திற்கும் (Toy story of Terror)' சிறந்த இயக்குநர் விருதை வென்றார் அங்கஸ் மேக்லேன். 

கேலின் சுஸ்மான்

கேலின் சுஸ்மான் 1995 ஆம் ஆண்டு முதல் பிக்சரில் பணியாற்றி வருகிறார். மேலும் 13 படங்களில் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். டாய் ஸ்டோரி இரண்டாம் பாகத்தில் சிறப்பாக பணியாற்றினார். மேலும் 2022ஆம் ஆண்டில் வெளியான லைட்இயர் படத்தின் தயாரிப்பாளர் இவர். இப்படி பிரபலமாக விளங்கும் அங்கஸ் மேக்லேன் மற்றும் கேலின் சுஸ்மானை டிஸ்னி நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. 

காரணம் 

 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் லைட் இயர் படம் தயாரிக்கப்பட்ட நிலையில் 226.4 மில்லியன் டாலர் மட்டுமே இப்படம் வசூலித்தது. இதன் விளைவாக பிக்சர் ஸ்டுடியோவிற்கு சுமார் 106 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.  இதனால் மேக்லேன் மற்றும் சுஸ்மான் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. படத்தின் தோல்வியை சுட்டிக்காட்டி டிஸ்னி இவர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget