பிரதமர் மோடியிடமிருந்து வந்த 2 போன் கால்..! பட்னாவிஸ் துணை முதலமைச்சர் பதவிக்கு பின்னால் நடந்தது என்ன?
ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்ற அந்த நாள் முழுவதும் நடைபெற்ற அரசியல் நகர்வுகளை தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிந்திருந்தார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்ற அந்த நாள் முழுவதும் நடைபெற்ற அரசியல் நகர்வுகளை தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிந்திருந்தார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், கட்சியின் டெல்லி தலைமையின் அழைப்பை மதிக்கும் வகையில் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார் என்றும் அரசியல் வட்டாரங்களில் முனுமுனுக்கபடுகிறது.
இதுகுறித்து பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "மகாராஷ்டிராவில் நடக்கும் ஒவ்வொரு நகர்வுகளை பட்னாவிஸ் அறிந்திருந்தார். அவரது கூர்மையான அரசியல் புத்திசாலித்தனம் இல்லாமல் இது உண்மையில் நடந்திருக்காது. எனவே, என்ன நடக்க போகிறகு என்பது குறித்து அவருக்கு தெரிவிக்கப்படவில்லை என்பது கூறுவதை எளிதாக நம்ப முடியவில்லை.
குறைந்தபட்சம் இரண்டு முறை பிரதமர் மோடி, அவரை அழைத்து பேசிய பிறகே ஃபட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றார் எனக் கூறப்படுகிறது. மேலும், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஃபட்னாவிஸிடம் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விரிவாக விளக்கிய பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர், "ஃபட்னாவிஸுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. மேலும் அவர் அரசின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார் என்று அறிவிப்பார் என்பது யாருக்கும் தெரியாது. இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஃபட்னாவிஸ் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
ஃபட்னாவிஸ் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நேர்மையான தலைவராகவும் இருந்ததால், அவர் அரசாங்கத்திற்கு பெரிய பலமாக இருப்பார். அரசில் அங்கம் வகிக்க மாட்டேன் என அவர் திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, அவர் தனது முடிவை இரண்டு மணி நேரத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் கட்சி தலைமையால் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
பட்னாவிஸ், கட்சிக்கு விசுவாசமான இருந்து வருகிறார். கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து உயர்ந்தவர். எனவே அவர் அமைப்பில் உள்ள ஒழுக்கத்தை அவர் புரிந்துகொள்கிறார்" என்றார்.
மேலும், பட்னாவிஸ்க்கு புகழாரம் சூட்டிய அந்த முக்கிய தலைவர், "மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் தலைமை வகித்ததால் தான், அக்கட்சி சமீபத்தில் மூன்றாவது மாநிலங்களவை தொகுதியில் வெற்றி பெற முடிந்தது. மேலும் மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை கவிழ்க்க முடிந்தது" என்றார்.
வியாழன் மாலை, மகாராஷ்டிராவின் 20வது முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதலமைச்சராக பட்னாவிஸும் பதவியேற்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்