Delhi murder case: காதலியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. ஆங்கில புத்தகம்.. விளையாடுவதற்கு செஸ்.. அஃப்தாபின் விநோத நடத்தை..
Delhi murder case: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆப்தாப் படிப்பதற்காக ஒரு புத்தகத்தை கேட்டுள்ளார். அதனை, சிறை அதிகாரிகளும் வழங்கியுள்ளனர் என சிறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Delhi murder case: டெல்லி கொலை வழக்கு நாட்டையே அதிர வைத்து வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நாள்தோறும் பல்வேறு விதமான ஷாக் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆப்தாப் படிப்பதற்காக ஒரு புத்தகத்தை கேட்டுள்ளார். அதனை, சிறை அதிகாரிகளும் வழங்கியுள்ளனர் என சிறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நாவலாசிரியர் பால் தெராக்ஸ் எழுதிய பயணக்கட்டுரையான 'தி கிரேட் ரயில்வே பசார்: பை ட்ரெயின் த்ரூ ஏசியா' என்ற புத்தகத்தை டெல்லி காவல்துறை ஆப்தாப்புக்கு வழங்கியுள்ளது.
அந்த புத்தகம் குற்ற சம்பவங்கள் அடிப்படையாக வைத்து எழுதப்படவில்லை என்பதாலும் மற்றவர்களுக்கோ அல்லது அவருக்கோ தீங்கு இழைக்கும் வகையில் அந்த புத்தகத்தில் கருத்துக்கள் எதுவும் இடம்பெறாததாலும் அது அவருக்கு வழங்கப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஆப்தாப்பின் தினசரி நடவடிக்கைகள் குறித்து பேசிய சிறை அதிகாரிகள், "சிறையில் பெரும்பாலான நேரங்களில், ஆப்தாப் செஸ் விளையாடுவார். செஸ் விளையாடி அவர் நேரத்தை செலவிடுகிறார். பெரும்பாலான நேரங்களில் தனிமையில்தான் செஸ் விளையாடுகிறார். எப்போதாவது இரண்டு சக கைதிகளுடன் செஸ் விளையாடுகிறார்.
ஆப்தாப் செஸ்ஸை விரும்புகிறார். மேலும், அவர் வெவ்வேறு உத்திகளைத் கொண்டு இரண்டு முனைகளிலிருந்தும் செஸ்ஸை விளையாடுகிறார். இதில், அவர் சிறைப்பாக விளையாடுகிறார். ஆப்தாபின் அறையைப் பகிர்ந்து கொள்ளும் விசாரணைக் கைதிகள் இருவரும் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ஆப்தாபை உன்னிப்பாகக் கண்காணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தனக்கு எதிராக எந்த மாதிரியான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என ஆப்தாபே திட்டமிடுகிறார். இது டெல்லி காவல்துறைக்கு ஆரம்பத்திலிருந்தே சந்தேகமாக எழுப்பியுள்ளது.
ஆப்தாப் மிகவும் தந்திரமானவர் என அவர்கள் கருதுகின்றனர். அவரது ஒவ்வொரு அசைவும் நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. அவர் இரு முனைகளிலிருந்தும் தனியாக விளையாடுகிறார்"
ஆப்தாபை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளில் ஒருவர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "போலீஸ் சொன்னதை ஆப்தாப் முழுவதுமாக பின்பற்றுகிறார். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். போலீசாருடன் ஒத்துழைக்கிறார். மேலும், பாலிகிராப் மற்றும் நார்கோ சோதனைகளுக்கு ஒப்புக்கொண்டார். ஆனால், தற்போது அவரது நன்னடத்தையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காவல்துறைக்கு கீழ்படிந்த நடக்கும் ஆப்தாபின் நடத்தையை தவிர, கேட்கும் கேள்விகளுக்கு முன்னதாகவே திட்டமிட்டு அவர் பதில் அளிக்கிறாரோ என காவல்துறை சந்தேகிக்கின்றனர். ஒழுக்கமாக நடந்து கொள்வதும் அவரின் நன்னடத்தையும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அனைத்து கேள்விகளுக்கு அவரால் எப்படி ஒரே பதில்களை அளிக்க முடியும்? கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த பதில்களை எளிக்க வேண்டும் என அவர் முன்னதாகவே திட்டமிட்டது போல தோன்றுகிறது" என்றார்.