மேலும் அறிய

Delhi Mayor Election: டெல்லி மாமன்ற மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு.. பாஜக - ஆம் ஆத்மியினர் இடையே கூச்சல், குழப்பம்

டெல்லி மாநகராட்சிக்கான மேயரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல், பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்புடன் பதவியேற்பு

டெல்லி மாமன்றத்தின் மேயரை தேர்வு செய்வதற்காக கடந்த 6ம் தேதி மாமன்றம் கூடிய போது, பாஜக மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட, தள்ளுமுள்ளு காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, டெல்லி மாநகராட்சிக்கான மேயரை தேர்வு செய்ய, மீண்டும் இன்று தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  ஏற்கனவே நடந்ததை போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், இம்முறை மாமன்ற அவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஆம் ஆத்மியின் கடும் எதிர்ப்பையும் மீறி, நியமன உறுப்பினர்கள் முதலில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதைதொடர்ந்து தேர்தலில் வென்ற மாமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். பின்னர் மேயர் பதவிக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆம் ஆத்மி எதிர்ப்பு:

அப்போது பேசிய ஆம் ஆத்மி மாமன்ற உறுப்பினர் முகேஷ் கோயல், மேயர் தேர்தலில் வாக்களிக்க நியமன உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை.  எனவே, தேர்தலின் போது அவையில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையல் பாஜகவினருக்கும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

கூச்சல், குழப்பம் - தேர்தல் ஒத்திவைப்பு

இருதரப்பு உறுப்பினர்களும் அவையின் மையப்பகுதியில் கூடி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தை தொடர்ந்து, மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதோடு, மாமன்ற நிலைக்குழு மற்றும் மாமன்ற துணை மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தலும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி மாமன்றத்திற்கான மேயரை தேர்வு செய்யும் தேர்தல், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாமன்ற தேர்தல்:

கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 250 மாநகராட்சி வார்டுகளில் 134 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது ஆம் ஆத்மி. பெரும்பான்மைக்கு தேவைப்படும் எண்ணிக்கையை காட்டிலும் அதிக இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் வெறும் 9 இடங்களையும் மட்டுமே கைப்பற்றியுள்ளது.

மேயர் பதவிக்கான தேர்தல்:

இதைதொடர்ந்து, மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் அஷ்ஷூ தாக்கூர் ஆகியோரும், பாஜக சார்பில் ரேகா குப்தா பெயரும் முன் மொழியப்பட்டுள்ளது. அதேபோல துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில்  ஜலஜ் குமார் மற்றும் ஆலே முகமது இக்பால் ஆகியோரும் பாஜக சார்பில்  கமல் பக்ரியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

துணைநிலை ஆளுநர் மீது குற்றச்சாட்டு:

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநர் வி.கே. சக்‌ஷேனா இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் தான்,  பாஜகவை சேர்ந்த  சத்ய ஷர்மாவை தற்காலிக சபாநாயகராக நியமித்து ஆளுநர் விகே சக்சேனா உத்தரவிட்டார்.  அதோடு, தங்களிடம் கலந்தாலோசிக்காமலேயே, பாஜக உடன் தொடர்புடைய 10 பேரை  நியமன உறுப்பினர்களாக, ஆளுநர் நியமித்துள்ளதாகவும், அர்விந்த் கெஜ்ரிவால் குற்றாம்சாட்டி இருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget