தெரு நாயை காப்பாற்ற சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம் - டெல்லியில் சோகம்!
தெரு நாயைக் காப்பாற்ற முயன்றபோது, அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாலையில் தவறி விழுந்து, வேன் மோதியதில் உயிரிழந்தார்.
கிழக்கு டெல்லியின் ஆனந்த் விஹாரில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றின் சமையலறையில் பணிபுரியும் 24 வயது இளைஞர், தெரு நாயைக் காப்பாற்ற முயன்றபோது, அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாலையில் தவறி விழுந்து, வேன் மோதியதில் உயிரிழந்தார். வியாழன் இரவு வடக்கு டெல்லியில் உள்ள வசிராபாத் கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
wow..what twist of words..a human death trying avoid strays dog is reported like this and the person is blamed for not wearing helmet! everyone is hand-in-glove with fake feeder mafia connected to power and money !https://t.co/PsceiArHxS
— Inf Anah (@InfAnah) August 26, 2022
விபத்து நடந்த இடத்தில் ஹெல்மெட் எதுவும் கிடைக்கவில்லை என்றும், பைக் ஓட்டுபவர் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றும் போலீசார் தெரிவித்தனர். வாகனத்தை வேகமாக ஓட்டியது, அலட்சியமாக செயல்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வசிராபாத் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறந்தவர் டெல்லியில் உள்ள பிஹாரிபூரில் வசிப்பவர் என்றும் அவரின் பெயர் ராகுல் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தனது பணியிடத்திலிருந்து வீடு திரும்பும் போது விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது வேலைக்காக வீட்டை விட்டு வெளியே வந்தாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
தெரு நாயைக் காப்பாற்ற முயன்றபோது அவரது பைக் சாலையில் தவறி விழுந்தது விபத்தை நேரில் பார்த்த சில உள்ளூர்வாசிகளால் உறுதிப்படுத்தப்பட்டது.
This happened today. Like I said, do not panic. @Ishpreet_s_m @somnath1978 https://t.co/bMruOwNHOh
— Burnard Rodri (@rodri_goad) August 26, 2022
இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் (வடக்கு) சாகர் சிங் கல்சி கூறுகையில், "இரவு 11:30 மணியளவில், வஜிராபாத் கிராமத்தில் உள்ள புஸ்தா சாலையில் சாலை விபத்து நடந்ததாக காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஒரு பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததைக் கண்டனர்.
அவரது பைக் நழுவி அவர் சாலையில் விழுந்த பிறகு, பின்னால் வந்த வேன் அவர் மீது மோதியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதில் தலையில் காயம் அடைந்த பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்தில் ஹெல்மெட் எதுவும் கிடைக்கவில்லை” என்றார். பைக் ஓட்டிய ராகுல், திருமணமாகாதவர் என்றும், ஹோட்டலில் இருந்து மாதம் ₹18,000 சம்பளம் வாங்குவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.