Delhi Lockdown: டெல்லியில் தனியார் அலுவலகங்கள் மூடல்; வீட்டில் இருந்து பணி செய்ய உத்தரவு..!
விலக்கு அளிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களை தவிர பிற அனைத்து நிறுவனங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலால் டெல்லியில் தனியார் அலுவலகங்கள் மூடப்படுகின்றன. அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐ.டி,ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
All private offices in Delhi shall be closed, except those which are falling under the exempted category; work from home shall be followed. All restaurants & bars shall be closed, takeaways allowed: DDMA in its revised guidelines pic.twitter.com/Or74McCXKI
— ANI (@ANI) January 11, 2022
இந்த நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் தனியார் அலுவலகங்களை மூட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலால் தனியார் அலுவலகங்கள் மூடப்படுகின்றன. பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களை தவிர பிற அனைத்து நிறுவனங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் பார்களும் மூடப்படுகின்றன.
Private offices in Delhi shall be closed, barring the ones in the exempted category; work from home shall be followed: DDMA pic.twitter.com/yPkwDR8t3o
— ANI (@ANI) January 11, 2022
டெல்லியில் இந்த வாரம் நிச்சயமாக கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டக்கூடும் என்றும், அதன் பிறகு மூன்றாவது அலையின் தொற்றுகள் குறையத் தொடங்கும் எனவும் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். தேசிய தலைநகரில் நேற்று 19,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. இது கடந்த ஞாயிற்றுக்கிழமையை (22,751) விட சற்றே குறைவு ஆகும்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றால் 277 பேர் உயிரிழந்த நிலையில், 69,959 பேர் பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமிக்ரானால் மொத்தம் 4,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்