Delhi G20 summit: ஜி20 மாநாட்டை தவிர்க்கும் சீன அதிபர்.. புடினும் வரமாட்டாராம்.. வெளியான தகவல்.
Delhi G20 summit: ஜி-20 மாநாட்டில் சீன பிரதமர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஜி-20 மாநாட்டில் சீன பிரதமர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார் என்று ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜி-20 உச்சிமாநாட்டை இந்த ஆண்ட் இந்தியா நடத்துகிறது. பல்வேறு மாநிலங்களில் மாநிலங்களில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஜி20 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாள்கள் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் பிடன், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரது சந்திப்பு இருக்கும் என்றும், இந்த சந்திப்பின்போது வர்த்தகம் மற்றும் எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கபபட்டது. ஆனால், இந்தமாநாட்டில் கலந்துகொள்ள சீன பிரதமர் வரமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக பிரீமியர் லி கியாங் கல்ந்துகொள்வார் என்றும் ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், சீன தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி மற்றும் ஜி20யில் இருக்கும் ஒரு நாட்டைச் சேர்ந்த அதிகாரி ஆகியோர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய வருகையை உறுதி செய்துள்ள நிலையில், சீன பிரதமர் வரமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் தனக்கு பதிலாக வெளியுரவுத்துறை அமைச்சர் செர்கேய் லவ்ரோவ் கல்ந்துகொள்வார் என்று ரஷ்ய அதிபர் புடின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
நவம்பர் 12-18 தேதிகளில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு தலைவர்கள் உச்சிமாநாட்டில் சீன அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ஆகியோருக்கு இடையே நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஜின்பிங் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை தனது வரைபடத்துடன் இணைத்து சீனா வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு எல்லை பகுதிகளில் சீனா சுரங்கப்பாதைகளை அமைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபருடன் பிரதமர் மோடி எல்லை பிரச்சனை தொடர்பாக பேசியதாக கூறப்பட்ட நிலையில் சீனா வெளியிட்ட புதிய அவரைபடம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதை ஜின்பிங் மற்றும் புடின் தவிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.