Delhi Firecrackers Ban: தீபாவளியை ஸ்வீட் வாங்கி சாப்பிட்டு கொண்டாடுங்க...உச்சநீதிமன்றம் தெரிவித்தது என்ன?
Delhi Firecrackers Ban: தீபாவளி அன்று இனிப்பு வாங்கி சாப்பிட்டு கொண்டாடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Delhi Firecrackers Ban: தீபாவளி அன்று இனிப்பு வாங்கி சாப்பிட்டு கொண்டாடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் தீபாவளி அன்று அதாவது அக்டோபர் 21ஆம் தேதி சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும் எனவும் தீபாவளியை இனிப்பு வாங்கி சாப்பிட்டு கொண்டாடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 24-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புத்தாடைகளையும், பட்டாசுகளையும் போட்டி போட்டு வாங்கிக்கொண்டு வருகின்றனர். நாட்டிலே மிகவும் மோசமான நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை வர உள்ளதால் டெல்லியில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினால் காற்று மாசு கடுமையாக அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால், டெல்லியில் தீபாவளி பண்டிகையை தினத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டள்ளது. அதையும் மீறி பட்டாசு வெடித்தால் ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு தயாரித்தல், பட்டாசுகளை விற்பனை செய்தல் மற்றும் பட்டாசுகளை வைத்திருந்தாலும் தண்டனைக்குரிய விஷயம் ஆகும். அவ்வாறு பிடிபட்டால் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் சட்டப்பிரிவு 9 பியின் கீழ் விதிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளுக்கும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு 2023ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை முழுமையான தடை விதிக்கப்பட்டது என அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
டெல்லியில் காற்று மாசு எப்படி இருக்கிறது என பார்க்கவில்லையா? தீபாவளியை வேறு விதமாகவும் கொண்டாடலாம். இனிப்பு வாங்கி சாப்பிட்டு கொண்டாடுங்கள். மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கட்டும், என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Crime : கணவனுக்கு கல்தா..! 17 பவுனுடன் மாயமான மனைவி...! நடந்தது என்ன தெரியுமா...?