Lok Sabha Winter Session: தவாங் பகுதியில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே நடந்த மோதல்.. என்ன நடந்தது?
டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சால பிரதேசத்தில் தவாங் பகுதியில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கமளிக்க உள்ளார்.
டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சால பிரதேசத்தில் தவாங் பகுதியில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கமளிக்க உள்ளார்.
மாநிலங்களவை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் கடந்த வாரம் தவாங் பகுதியில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்க எதிர்கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிற்பகலில் பதிலளிப்பார் என மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அர்சின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய மற்றும் சீன துருப்புக்கள் கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டில் (எல்ஏசி) சிறிது நேரம் மோதிக்கொண்டனர் .
டிசம்பர் 9 அன்று நடந்த மோதலில் இரு தரப்பிலிருந்தும் ஒரு சில வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறினர். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் இந்தச் சண்டை நடந்தது.
சீன துருப்புக்கள் LAC ஐக் கடந்ததை தொடர்ந்து இந்தியா வீரர்கள் அதனை துணிந்து எதிர்கொண்டு சண்டையிட்டனர். கிழக்கு லடாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு, இந்திய-சீனப் படைகளுக்கு இடையே இதுபோன்ற மோதல்கள் இடம்பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும். 2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவம், இதுவரை நடந்த மோதல்களில் மிக மோசமானது, நாட்டிற்காக 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 40 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர் அதில் சிலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்களை ஏற்படுத்தியது, இதில் ஒன்று பாங்காங் ஏரியின் தென் கரையில் நடந்தது. ராணுவத் தளபதிகளுக்கு இடையேயான பல சந்திப்புகளுக்குப் பிறகு, லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளில் இருந்து இந்திய மற்றும் சீன துருப்புக்கள் பின்வாங்கின. அரசாங்க வட்டாரங்களின்படி, 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற மோதல்கள் கருத்து வேறுபாடு காரணமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டரில் எல்ஏசியை ஒட்டிய சில பகுதிகளில், இரு தரப்பினரும் தங்கள் கட்டுப்பாட்டு எல்லை வரை ரோந்துப் பணியில் ஈடுபட்டுவது வழக்கம். 09 டிசம்பர் 2022 அன்று, சீனத் துருப்புக்கள் தவாங் செக்டரில் உள்ள எல்ஏசியைத் நெருங்கியபோது இந்திய ராணுவ வீரர்கள் அதனை துணிச்சலுடன் கையாண்டனர் என அந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின், அப்பகுதிக்கு ராணுவ தளபதி, சீன அதிகாரிகளிடம் கொடி சந்திப்பு நடத்தி அமைதியை உறுதி செய்தார்.