மேலும் அறிய

Crime: ரசகுல்லாவிற்காக இளைஞர் குத்திக்கொலை..! கலவர வீடாக மாறிய கல்யாண வீடு..!

Crime: உத்தரபிரதேசத்தில் கல்யாண விருந்தில் ரசகுல்லா பற்றாக்குறையால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: உத்தரபிரதேசத்தில் கல்யாண விருந்தில் ரசகுல்லா பற்றாக்குறையால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் எட்பத்பூரில் கடந்த புதன்கிழமை ஒரு இஸ்லாமியர் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று காலை திருமணம் முடிந்து இரவு ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவில் கல்யாண விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ரசகுல்லா வேண்டும் என்று ஒருவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ரசகுல்லா இல்லாத காரணத்தினால் மணமகன் மற்றும் மணமகள் தரப்பு குடும்பத்தினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சிறிது நேரத்தில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் பெரியதாகி கைகலப்பாக மாறியது. அங்கு இருக்கும் தட்டு, கரண்டி, சொம்பு போன்ற பாத்திரங்களை ஒருவருக்கொரவர் வீசி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருந்தபோது அந்த இடத்தில் யாரோ ஒருவர், ஒரு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஒருவர் உயிரிழந்தது கூட தெரியாமல் அந்த இடத்தில் சண்டை தீவிரமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக அக்கப்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்புக்கு சமாதானம் செய்து வைத்தனர். கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, எட்மத்பூர் வட்ட அதிகாரி ரவிக்குமார் குப்தா கூறுகையில், “ரசகுல்லா பற்றாக்குறை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கடுமையான மோதலாக மாறி, கல்யாண விருந்துக்கு வந்த ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இதில் பலத்த அடைந்த சன்னி (22)  என்பவர் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 5 பேர் எட்மத்பூரில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

Crime: காதல் மனைவியை தேடி வந்த கேரள இளைஞர்.... திருவண்ணாமலையில் உயிரிழந்த சோகம்

கோவையில் பந்த் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை - எச்சரித்த நீதிமன்றம்..! அழைப்பே விடுக்கவில்லை - அண்ணாமலை..!

தலைப்பு செய்திகள்

25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Embed widget