Coromandel Express Accident: சென்னை நோக்கிவந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது எப்படி? ரயில்வே வெளியிட்ட பகீர் தகவல்..
Coromandel Express Accident Reason: இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
![Coromandel Express Accident: சென்னை நோக்கிவந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது எப்படி? ரயில்வே வெளியிட்ட பகீர் தகவல்.. Coromandel Express Accident Reason How Odisha Balasore Train Accident Happened Coaches Derailed Know Complete Details Coromandel Express Accident: சென்னை நோக்கிவந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது எப்படி? ரயில்வே வெளியிட்ட பகீர் தகவல்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/02/fb38abf596dd467fa1586016830c8d6e1685724354538729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Coromandel Express Accident : சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் இருந்து இன்று மதியம் 3:20 மணிக்கு கிளம்பிய ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சரக்கு ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்தது எப்படி?
இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் வெளியிட்டுள்ள ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா, "இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரம் கழித்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன" என்றார்.
இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு பேசினார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஒடிசா மாநிலத்தில் #CoromandelExpress விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக் அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
ரயிலில் பயணித்தவர்கள் எத்தனை பேர்? தமிழ்நாட்டுக்கு முன்பதிவு செய்தவர்கள் எத்தனை பேர்?
சென்னைக்கு ரிசர்வ் செய்து இந்த ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 869 ஆகும். பதிவு செய்யாமல் ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து தெரியவில்லை. தற்போது வரை, அந்த விபத்து நடந்த பாதையில் செல்லவிருந்த 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)