Police Attacked Auto Driver: நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கிய காவலர்..! உடனடியாக பாய்ந்த நடவடிக்கை..!
Crime: கர்நாடகா மாநிலத்தில் நடுரோட்டில் வைத்து வாகன ஓட்டியை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை பாய்ந்தது.
கர்நாடகா மாநிலத்தில் நடு ரோட்டில் வைத்து வாகன ஓட்டியை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்:
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது திடீரென மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் கோபமடைந்த காவலர் ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கினார். இதில் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது.
காவலர் சஸ்பெண்ட்:
இந்த சம்பவத்தை அருகில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வேகமாக வைரலாகியது. வீடியோ பரவிய நிலையில் உடனடியாக ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய காவலரை பணியிடை நீக்கம் செய்து மாண்டியா காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக கோவையை அடுத்த செல்வபுரம் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளை திடீரென் குச்சி ஒன்றினை எடுத்து தாக்கி தொடங்கினார். இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சென்றவர்களை குச்சியால் ஓடி ஓடி அடித்தார்.
மதுபோதை:
நடந்து சென்ற பாதசாரிகளையும் விரட்டி தாக்கி உள்ளார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திற்கு யாருமே அவரிடம் செல்ல முடியவில்லை. பின் பொதுமக்கள் அவரிடம் சென்று ஏன் இப்படி சாலை விதிகளை கடை பிடித்து சென்றவர்களை எல்லாம் அடிக்கின்றீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேச ஆரம்பித்ததும்தான் அவர் குடிபோதையில் இருந்தது பொது மக்களுக்கு தெரிய வந்தது.
இதனால் பொது மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். பொதுமக்கள் போக்குவரத்து காவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். அந்த போக்குவரத்து காவலரையும் கண்டித்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பொது மக்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Cylinder Price: ஹாப்பி நியூஸ்.. சிலிண்டர் விலை அதிரடி குறைவு..! காரணம் என்ன தெரியுமா..?