Bypoll Results 2021: 14 மாநில இடைத்தேர்தல்: ம.பி.,யில் மட்டும் ஆறுதல் பெற்ற பாஜக... மீண்டு எழும் காங்கிரஸ்... திரிணாமுல் கெத்து!
அசாமில் இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளையும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின.
14 மாநிலங்களில் 29 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. எதிர்கட்சிகல் 16 இடத்தை கைப்பற்ற உள்ளன. பாஜக ஆளும் இமாச்சல் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மண்டி மக்களவை தொகுதி, 3 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதால் ஆளும் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளையும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. அதே நேரத்தில், தெலுங்கானாவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அசாமில் இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளையும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின.
தெலுங்கானா
தொகுதி வெற்றி தோல்வி வித்தியாசம்
ஹூசுராபாத் பாஜக டிஆர்எஸ் 24,068
மேற்குவங்கம்
தொகுதி வெற்றி தோல்வி வித்தியாசம்
தின்ஹட்டா திரிணாமுல் காங்கிரஸ் பாஜக 1,64,089
கோசபா திரிணாமுல் காங்கிரஸ் பாஜக 1,64,089
கர்தாஹா திரிணாமுல் காங்கிரஸ் பாஜக 93,832
சாந்திபூர் திரிணாமுல் காங்கிரஸ் பாஜக 64,675
ராஜஸ்தான்
தொகுதி வெற்றி தோல்வி வித்தியாசம்
தரிவாத் காங்கிரஸ் பாஜக 23,404
வல்லபநகர் காங்கிரஸ் பாஜக 44,280+
மத்திய பிரதேசம்
தொகுதி வெற்றி தோல்வி வித்தியாசம்
ஜோபாட் பாஜக காங்கிரஸ் 6,104
பிரித்விபூர் பாஜக காங்கிரஸ் 13,507
ராய்கான் காங்கிரஸ் பாஜக 12,062+
மகாராஷ்டிரா
தொகுதி வெற்றி தோல்வி வித்தியாசம்
தெக்ளூர் காங்கிரஸ் பாஜக 41,933
கர்நாடகா
தொகுதி வெற்றி தோல்வி வித்தியாசம்
ஹனகல் காங்கிரஸ் பாஜக 7,373
சிந்துகி பாஜக காங்கிரஸ் 31,185
மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்
தொகுதி வெற்றி தோல்வி வித்தியாசம்
தாத்ரா நகர் ஹவேலி சிவசேனா பாஜக 51,269
மண்டி (இமாச்சல்) காங்கிரஸ் பாஜக 15,678
கந்த்வா (ம.பி.) பாஜக காங்கிரஸ் 81,701+
Himachal Pradesh | Congress workers celebrate in Kangra as party candidates wins all three Assembly seats that went to by-polls on October 30 pic.twitter.com/YwkoJwXx3a
— ANI (@ANI) November 2, 2021