(Source: ECI/ABP News/ABP Majha)
MP Santokh Singh Dies : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு..!
பஞ்சாப்பில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார்.
பஞ்சாப்பில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார். இன்று காலை லூதியானாவில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்றபோது எம்பி சந்தோக் சிங் மயங்கி விழுந்தார்.
#WATCH | Punjab: Congress MP Santokh Singh Chaudhary was taken to a hospital in an ambulance in Ludhiana, during Bharat Jodo Yatra. Details awaited.
— ANI (@ANI) January 14, 2023
(Earlier visuals) pic.twitter.com/upjFhgGxQk
இதையடுத்து, ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) காலை டோராஹாவில் இருந்துமீண்டும் தொடங்கியது. இந்த யாத்திரையில் ஏராளமான உள்ளூர்வாசிகள் இணைந்தனர்.
யாத்திரையின் போது, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, எம்.பி.க்கள் அமர் சிங், குர்ஜித் சிங் அவுஜ்லா, முன்னாள் எம்.எல்.ஏ குர்கிரத் கோட்லி, பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரிந்தர் சிங் தில்லான் மற்றும் பல கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியுடன் சென்றனர்.
குளிர் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் யாத்திரையின் போது ஏராளமான கட்சி ஆதரவாளர்கள் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். பஞ்சாப் யாத்திரை தொடங்குவதற்கு முன் புதன்கிழமை, ராகுல் காந்தி குருத்வாரா ஃபதேகர் சாஹிப்பில் சென்றார்.
இந்த யாத்திரை ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைவதற்கு முன்னதாக ஜனவரி 19ஆம் தேதி பதன்கோட்டில் பேரணி நடத்தப்படும்.
செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடையும், ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரில் காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். இந்தப் பேரணி இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சென்றடைந்துள்ளது.