மேலும் அறிய

அடுத்தாண்டு முதல் புதுவையில் முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் 3% இடஒதுக்கீடு

’’இந்தாண்டு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என்பதால் அடுத்தாண்டு முதல் இடஒதுக்கீடு தர நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்’’

புதுச்சேரியில் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அடுத்தாண்டு மருத்துவப் படிப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றியின் பொன்விழா மற்றும் புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் 16 ஆம் ஆண்டு விழா லாஸ்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. விழாவில் 1971 இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நினைவு பரிசுகளும், அவர்களது பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகையும் முதல்வர் வழங்கினார். இவ் விழாவில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், செல்வகணபதி எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்தாண்டு முதல் புதுவையில் முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் 3% இடஒதுக்கீடு

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் என்.ரங்கசாமி, நாட்டின் எல்லையில் கடும் குளிர், மழையையும் பொருட்படுத்தாமல் 24 மணி நேரம் பணியாற்றி நாட்டையும், மக்களையும் ராணுவ வீரர்கள் பாதுகாக்கின்றனர். ஆகவேதான் ராணுவ வீரர்களுக்காக அரசு அதிக நிதியை செலவிடுகிறது. கண்ணுக்கு தெரிந்த எதிரிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கும் வீரர்கள் கண்ணுக்கு தெரியாத எதிரி கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் 82 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். இது 100 சதவீதமாக ஆக வேண்டும்.

இந்தியா – பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தை இனி முப்படை நலத்துறை அலுவலகத்தில் கொண்டாட வேண்டும். அப்போதுதான் நாங்கள் அலுவலகத்துக்கு வர முடியும். நான் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற அசைக்க முடியாது எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தேன். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வியில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி உள்ளார்கள்.

அடுத்தாண்டு முதல் புதுவையில் முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் 3% இடஒதுக்கீடு

இந்தாண்டு கொடுக்க முடியாது. அடுத்தாண்டு மருத்துவ கல்வியில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் அரசு பணியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அது இப்போது இல்லை. குரூப் சி பணியிடங்கள் குரூப் பி ஆக மாறிவிட்டது. இதனால் குரூப் பி பணியிடத்தில் உடனே இடஒதுக்கீடு அறிவிக்க முடியாது. இதுகுறித்து நிர்வாகத்தில் கலந்து பேசி இடஒதுக்கீடு வழங்க வாய்ப்பு இருந்தால், நிச்சயமாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை

School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! இன்று 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!

எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?

Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! இன்று 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! இன்று 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!

Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!

President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!

அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?

Embed widget