Chhattisgarh Violence:சத்தீஸ்கரில் வன்முறை:அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல், வாகனங்களுக்கு தீவைப்பு; நடந்தது என்ன?
Chhattisgarh Violence: சத்தீஸ்கரில் மாநிலம் பலோதாவில் அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பலோதா என்கிற பகுதியில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் பலோடா என்கிற பகுதியில் வழிபாட்டு தலத்தை, அரசு தரப்பினர் இடிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த கும்பல், கணிசமான அளவில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது வன்முறையாக மாறியது.
#WATCH | Chhattisgarh: Violence erupted in Balodabazar today after a demonstration over alleged damage to the religious place of Satnami Community. Stone pelting and arson reported during the violence; government offices vandalised, vehicles set on fire. pic.twitter.com/a3yF3mipwO
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 10, 2024
போராட்டக்காரர்கள், அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். கற்களை தூக்கி வீசியும், கம்புகளாலும் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், அங்கிருந்த வாகனங்கள் மீது தீவைத்தனர். இதனால் அப்பகுதி பெரும் பதற்றமாக மாறியது.
இச்சம்பவம் குறித்து, சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா கூறுகையில், “மே 15-16 இடைப்பட்ட இரவில் புனித அமர் குகையிலை சேதப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மாநில முதல்வர் விஷ்ணுதேவ் சாய் அறிவுறுத்தலின்படி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்த இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்” என்றார். ஜெய்த்காம் மற்றும் கோவிலைச் சேதப்படுத்தியது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு சத்னாமி சமூகத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை விசாரணைக் குழு அமைக்கப்படவில்லை. இதை எதிர்த்து அவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்தார்.
இந்நிலையில், சத்னாமி சமூகத்தின் புனித சின்னமான அமர் குஃபாவின் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டக்காரர்கள் பலோடா பஜார் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று தடுப்புகளை உடைத்து போராட்டம் நடத்தினர். அவர்கள் சுற்றியிருந்த பல கார்களுக்கு தீ வைத்தனர். பலோடா பஜார் கட்டிடத்தில் தீ வைத்தனர். கட்டிடத்தின் தீயினால் உயரமான அடுக்குகள் தீப்பற்றி எரிந்தன. இந்த பிரச்னையை உயர்மட்டத்தில் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.