Fashion Show in temple : சத்தீஸ்கர்: கோயிலில் ஃபேசன் ஷோ: வழக்கு பதிவு செய்த காவல்துறை
சத்தீஸ்கரில் கோயிலில் ஃபேசன் ஷோ நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சலாசர் பாலாஜி கோயில் உள்ளது. இக்கோயிலில் பேஷன் ஷோ நடந்ததாக கூறப்படுகிறது.
கோயிலில் பேஷன் ஷோ
பாலாஜி கோயிலில் பேஷன் ஷோ நடைபெறுவதை அறிந்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் கோயிலுக்கு விரைந்து வந்து, பேஷன் ஷோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து ஃபேஷன் ஷோ நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஃபேஷன் ஷோவானது எஃப்.டி.சி.ஏ என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டதாகவும், ஆரிப் மற்றும் மணீஷ் சோனி ஆகியோர் பேஷன் ஷோவின் அமைப்பாளர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
A "Fashion Show" was going on in the Salasar temple of Raipur, Chhattisgarh.
— The Analyzer (@Indian_Analyzer) September 18, 2022
Many young women were present in the temple being Half-Naked. Bajrang Dal workers got them out🔥💪
.
.
Follow .@Indian_Analyzer for All Updates.pic.twitter.com/0eqa4Utffl
பேசன் ஷோவாக மாற்றப்பட்ட கோயில் மண்டபம்
கோயில் மண்டபம் ஃபேசன் ஷோவாக மாற்றப்பட்டதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் பலரும் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இச்சம்பவம் பரவ ஆரம்பிக்க, பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இந்த நிகழ்வு இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இதுபோன்ற நிகழ்வுகளை கோயில்களில் நடத்துவது முறையற்றது என்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
Also Rad: Ponniyin Selvan Press Meet LIVE: பொன்னியின் செல்வன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...உடனடி அப்டேட் இதோ...!
The fashion show was going on in the Salasar temple of Raipur, Chhattisgarh. Bajrang Dal workers got the bandh done.
— Saiful@$#$$ (@SecularChannel) September 18, 2022
After the news of the fashion show in the temple, Bajrang Dal protested and accused it of hurting religious sentiments.
View this post on Instagram