Praggnanandhaa Meets PM: ”நீங்க அளிச்ச ஊக்கம் இருக்கே"...பிரதமர் தெரிவித்த பாராட்டு...மனம் உருகிய பிரக்ஞானந்தா!
பிரதமரை சந்தித்தது மிகவும் பெருமிதத்திற்குரிய தருணம் என்று பிரக்ஞானந்தா தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
![Praggnanandhaa Meets PM: ”நீங்க அளிச்ச ஊக்கம் இருக்கே Chess World Cup 2023 Runner Praggnanandhaa Meets Prime Minister Narendra Modi Delhi Praggnanandhaa Meets PM: ”நீங்க அளிச்ச ஊக்கம் இருக்கே](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/31/a32d1b3f7c5599d54a0f646859557c441693490590303572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Praggnanandhaa Meets PM: பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை இல்லத்துக்கே அழைத்து பிரதமர் மோடி நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த பிரக்ஞானந்தா:
உலகக் கோப்பை செஸ் போட்டியில் 2ஆம் இடத்தை பிடித்த பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை பிரதமர் மோடி அழைத்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோர் பிரதமர் மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது, பிரக்ஞானந்தா பெற்ற வெள்ளி பதக்கத்தை பிரதமர் மோடியிடம் காண்பித்துள்ளார். பின்னர், பிரக்ஞானந்தாவுக்கு பிரமார் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, பிரக்ஞானந்தா தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது, "பிரதமரை சந்தித்தது மிகவும் பெருமிதத்திற்குரிய தருணம். என்னையும் என் பெற்றோரையும் ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார்" என்று பதிவிட்டிருந்தார்.
Had very special visitors at 7, LKM today.
— Narendra Modi (@narendramodi) August 31, 2023
Delighted to meet you, @rpragchess along with your family.
You personify passion and perseverance. Your example shows how India's youth can conquer any domain. Proud of you! https://t.co/r40ahCwgph
இதற்கு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது, "பிரக்ஞானந்தா, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்களின் ஆர்வத்தையும், விடா முயற்சியை போட்டியில் பார்க்க முடிகிறது. இந்தியாவின் இளைஞர்களால் எந்த களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு பிரக்ஞானந்தா ஒரு உதாரணம்" என்று பதிவிட்டிருந்தார்.
பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு:
முன்னதாக, அஜர்பைசானில் இருந்து கடந்த 30ஆம் தேதி சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்பு, பிரக்ஞானந்தா தனது கும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவர் வென்ற வெள்ளிப்பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்தார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையாக அரசு சார்பில் வழங்கப்பட்டது.
வெள்ளி வென்ற பிரக்ஞானந்தா:
உலகக் கோப்பை செஸ் தொடரில் நார்வே வீரர் கார்ல்சனை எதிர்த்து போட்டியிட்ட பிரக்ஞாந்தா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். முன்னணி வீரரான கார்ல்சனுடன் மோதிய பிரக்ஞானந்தா மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளியிட்டார். இறுதிப்போட்டி முதல் சுற்றுகளும் டிரா ஆன நிலையின், டை பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. இந்தப் போட்டி விறுவிறுப்பாக சென்றது. முன்னணி வீரருக்கு கடும் சவால் அளித்தது பிரக்ஞ்னந்தாவின் நகர்வு. ஆனால், இந்த 2.5- 1.5 என்ற புள்ளிக்கணிக்கில் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)