Chandrayaan 3: சாதித்தது இந்தியா.. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திரயான் 3.. நாட்டிற்கே பெருமை..!
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் நீள்வட்டப் சுற்றுப்பாதையில், வெற்றிகரமாக நுழைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் நீள்வட்டப் சுற்றுப்பாதையில், வெற்றிகரமாக நுழைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
சாதித்தது இந்தியா..!
கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் பூமியிலிருந்து நிலவுக்கு செல்லும் தூரத்தில் மூன்றில் இரண்டு பங்கு கடந்துள்ளதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் “”நான் தான் சந்திரயான் - 3, நான் இப்போது நிலவின் ஈர்ப்பு விசையை உணர்கிறேன்” சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாட்தையில் நுழைந்தது” என குறிப்பிட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 5, 2023
“MOX, ISTRAC, this is Chandrayaan-3. I am feeling lunar gravity 🌖”
🙂
Chandrayaan-3 has been successfully inserted into the lunar orbit.
A retro-burning at the Perilune was commanded from the Mission Operations Complex (MOX), ISTRAC, Bengaluru.
The next… pic.twitter.com/6T5acwiEGb
ஆர்பிட் ரைசிங்:
கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலம் புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதைதொடர்ந்து கடந்த 20 நாட்களாக ஆர்பிட் ரைசிங் எனும் முறையில் படிப்படியாக உந்துவிசை கொடுக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து உந்தி தள்ளப்பட்டது. இதன் மூலம், டிரான்ஸ் லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவு பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நுழைந்தது. அதன் இறுதி முயற்சியாக தான் தற்போது நிலவின் நீள்வட்டப் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது.
சந்திரயான்-3ன் அடுத்த பயணம்:
இதனை தொடர்ந்து பல சவாலான கட்டங்களை சந்திரயான் 3 கடக்க உள்ளது. முக்கியமாக விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையின் உயரத்தை சிறிது சிறிதாக குறைத்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் விண்கலம் நிலைநிறுத்தப்படும். பின்பு அதே தொலைவில் நிலவை சுற்ற வைப்பது முக்கிய கட்டமாகும். 100 கிமீ தூரத்தை எட்டியபின் விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில் தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியையும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், சந்திரயான் 3 நிலவின் அதன் ஆராய்ச்சி தொடங்கி தரவுகளை வழங்கும். இந்த நிகழ்வு ஆகஸ்ட் 23 தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.