மேலும் அறிய

"ஆங்கிலம் கற்று சிறப்பாக செயல்படும் தமிழர்கள்" பாராட்டி தள்ளிய சந்திரபாபு நாயுடு!

ஆங்கிலம் கற்று வெளிநாட்டில் தமிழர்கள் சிறப்பாக செயல்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார். இந்தி திணிப்பு விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு புகழாரம் சூட்டி பேசியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆங்கிலம் கற்று வெளிநாட்டில் தமிழர்கள் சிறப்பாக செயல்படுவதாக சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு:

மத்திய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இது, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

தேசிய கல்வி கொள்கையின் மூலம் இந்தியை திணிக்க பாஜக முயற்சிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதற்கு பாஜக கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம் என பாஜக தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆனால், ஆங்கிலம் தங்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி தருவதாகவும் அதற்கு நேர்மாறாக இந்தி மொழி மற்ற மொழிகளை அழிப்பதாகவும் திமுக பதிலடி அளித்துள்ளது. 

விஸ்வரூபம் எடுத்த மும்மொழி கொள்கை விவகாரம்:

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு புகழாரம் சூட்டி பேசியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆங்கிலம் கற்று வெளிநாட்டில் தமிழர்கள் சிறப்பாக செயல்படுவதாக சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், "தமிழ்நாட்டில் இருந்து பலர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் ஆங்கிலம் கற்று, மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர். அங்கு உயர் பதவிகளில் இருக்கும் பலர் தமிழர்கள்தான்.

ஐஏஸ் தேர்வுகளுக்கு பயிற்சி எடுக்க டெல்லி வருபவர்கள் அதிகம் பேர் தமிழர்கள்தான். பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் அது தமிழ்நாடுதான் என்ற நிலை இருக்கும். தற்போது அவர்கள் சாதிக்க உலகம் முழுக்க பயணிக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மும்மொழி கொள்கை அமல்படுத்திய இந்திய பேசும் மாநிலங்களில் இரண்டாவது மொழி பேசுவோரின் எண்ணிக்கையே குறைவு என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலத்தை முதன்மை மொழியாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில், ஆங்கிலமும் பேசும் தாய்மொழி தமிழ் பேசுபவர்களின் விகிதம் 1991 இல் 13.5% ஆக இருந்தது, இது 2011 இல் 18.5% ஆக உயர்ந்தது.   

இதையும் படிக்க: Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

lock Up Death: ”அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்” - 5 காவலர்கள் கைது, சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
lock Up Death: ”அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்” - 5 காவலர்கள் கைது, சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
LPG Cylinder Price: ஷாக் கொடுத்த ரயில் டிக்கெட் விலை ஏற்றம், ஆப்படித்த சிலிண்டர் விலை? என்னயா இப்படி பண்றீங்க?
LPG Cylinder Price: ஷாக் கொடுத்த ரயில் டிக்கெட் விலை ஏற்றம், ஆப்படித்த சிலிண்டர் விலை? என்னயா இப்படி பண்றீங்க?
Donald Trump: “நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
“நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
Iran on Nuclear Talks: “எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
“எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Train Attack | “அய்யோ அடிக்காதீங்கம்மா” மூதாட்டியை தாக்கிய பெண்கள்! ரயிலில் நடந்த கொடூரம்!
Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
lock Up Death: ”அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்” - 5 காவலர்கள் கைது, சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
lock Up Death: ”அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்” - 5 காவலர்கள் கைது, சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
LPG Cylinder Price: ஷாக் கொடுத்த ரயில் டிக்கெட் விலை ஏற்றம், ஆப்படித்த சிலிண்டர் விலை? என்னயா இப்படி பண்றீங்க?
LPG Cylinder Price: ஷாக் கொடுத்த ரயில் டிக்கெட் விலை ஏற்றம், ஆப்படித்த சிலிண்டர் விலை? என்னயா இப்படி பண்றீங்க?
Donald Trump: “நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
“நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
Iran on Nuclear Talks: “எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
“எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
Trump on Tariff Deadline: வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Sivaganga Ajith Death Case: சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
Velachery MRTS Update: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
Embed widget