மேலும் அறிய

Jammu & Kashmir: ஜம்மு காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும்? - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதில்!

ஜம்மு காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பது காலவரையிட்டு கூற முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான தினசரி விசாரணை, கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஒரு மாத காலமாக நடந்து வரும் விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதேபோல, சட்டப்பிரிவு 35ஏ  ஜம்மு காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் யார் என வரையறுக்கும் உரிமை அம்மாநில சட்டப்பேரவைக்கு வழங்கியுள்ளது.

சரமாரி கேள்வி கேட்ட இந்திய தலைமை நீதிபதி:

சட்டப்பிரிவு 35ஏ குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவு, மற்ற இந்தியர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளது" என தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, முழு மாநில அந்தஸ்தை திரும்பபெற்றபோது கூட்டாட்சி தத்துவம் பின்பற்றபட்டதா? என மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, "ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா? ஒரு மாநிலத்திலிருந்து யூனியன் பிரதேசத்தை பிரிக்க முடியுமா? தேர்தல் எப்போது நடத்தப்படும். இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். உண்மையான ஜனநாயகத்தை எப்போது மீட்டெடுப்பீர்கள் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை எங்களிடம் கொடுங்கள். இதை பதிவு செய்ய விரும்புகிறோம்" என அடுக்கடுக்கான கேள்விகளை இந்திய தலைமை நீதிபதி எழுப்பினார்.

பதிலளித்த மத்திய அரசு:

இதற்கு, மத்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மத்திய அரசின் கருத்துகளை கேட்டுள்ளேன். யூனியன் பிரதேச அந்தஸ்து என்பது நிரந்தரம் அல்ல. மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய விசாரணையில், எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதை காலவரையிட்டு கூற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பிரிவு 370 நீக்கப்பட்டபின் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் 45.2% குறைந்துள்ளது என்றும், மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன் ஜம்முவை முழுமையாக தயார் படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும், ஜம்முவில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் பணிகள் முடிந்ததும் தேர்தல் ஆணையம் தான் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chandrayaan 3 Rover Findings: நிலவில் கந்தகம் (Sulphur) இருப்பதை மீண்டும் உறுதிசெய்த ரோவர் : இஸ்ரோ வெளியிட்ட வீடியோ!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget