மேலும் அறிய
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மருத்துவ படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்றி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே தங்களது வாதத்தை கேட்காமல் தி.மு.க. கேவியட் மனுத்தாக்கல் செய்ததாக குறிப்பிட்ட நிலையில், மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion