Dog Ban In India: நாய் பிரியர்களே! இந்த 23 வகை நாய்களை வளர்க்க இந்தியாவில் தடை - என்னென்ன தெரியுமா?
சென்னையில் ராட்வீலர் நாய்கள் கடித்து 5வயது சிறுமி உயிருக்கு போராடி வரும் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
இந்தியாவில் நாய்க்கடியால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் இந்தியாவில் பல்வேறு வகையான நாய்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதனைப் பற்றி காணலாம்.
சிறுமியை கடித்துக் குதறிய நாய்:
சென்னையில் ராட்வீலர் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வரும் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. தடை செய்யப்பட்ட நாய்களை உரிமம் இல்லாமல் அதன் உரிமையாளர் வளர்த்து வந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான விஷயங்களை தடுக்க சென்னை மாநகராட்சி தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், பொதுமக்களிடையே செல்லப்பிராணிகள் தொடர்பான விதிகள் தெரியாமல் இருப்பதும், தெரிந்து அலட்சியமாக இருப்பதும் தான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்க காரணமாகிறது.
வீட்டில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை, கிளி, அணில் போன்ற ஏகப்பட்ட பிராணிகளை பலர் வளர்ப்பதை காணலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் அனுமதி உண்டா? அப்படியிருந்தால் என்னென்ன விதிகளை பின்பற்றலாம் என்பதெல்லாம் பலருக்கும் தெரிவதில்லை. 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன உயிர் பாதுகாப்பு சட்டம் வனம் மற்றும் உயிரினங்கள் பாதுகாக்கக்கூடிய பட்டியலில் பல உயிரினங்களை பட்டியலிட்டுள்ளது.
23 வகை நாய்கள் வளர்க்கத் தடை:
பறவைகள்,விலங்குகள் என எதை வீட்டில் வளர்த்தாலும் சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் வெளிநாடு பறவைகள், விலங்குகளை இறக்குமதி செய்யவும் தனியாக அனுமதி பெற வேண்டும். அப்படியிருக்கையில் சமீபத்தில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிக்கை ஒன்றை அனுப்பியது.
அதில், பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர், பிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ , அமெரிக்கன் புல்டாக், போயர்போல் கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய்,ராட்வீலர் உள்ளிட்ட 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம், விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதற்கான உரிமம் வழங்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கையில் வீடு,வீடாக சென்று சோதனை செய்வது கடினமான ஒன்று தான். அதான் சட்ட விதிகளை சரியாக பின்பற்றும்படி நடவடிக்கை எடுத்தாலே பல விஷயங்களை தடுக்கலாம்.
மேலும் படிக்க: நாய் பிரியர்களா நீங்கள்? ஜாக்கிரதை! வளர்க்கும் முன் இந்த ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க!