CBI Raid : டெல்லி துணை முதல்வர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு! பரபரப்பில் தலைநகர் அரசியல்களம்!
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் துணை முதல்வராக மணீஷ் சிசோடியாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை முதல் திடீரென மணிஷ் சிசோடியாவிற்கு சொந்தமான வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் சி.பி.ஐ. 7 மாநிலங்களில் 21 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Excise Policy case: CBI raids in 7 states; Searches at 21 locations in Delhi-NCR, including premises of Manish Sisodia
— ANI Digital (@ani_digital) August 19, 2022
Read @ANI Story | https://t.co/9msVqpDItz#DelhiExcisePolicy #ArvindKejriwal #ManishSisodia #AAP #BJP #CBI pic.twitter.com/cnSTDJdj5j
சி.பி.ஐ. சோதனை நடக்கும் இடங்களின் முன்பு ஆம் ஆத்மி கட்சியினரும், மணீஷ் சிசோடியா ஆதரவாளர்களும் குவிந்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.